Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 1 ஜனவரி, 2013

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:நானாவதி விசாரணை கமிஷனின் காலாவதி 19-வது முறையாக நீட்டிப்பு!


2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத அளவுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட நீதிபதி நானாவதி தலைமையிலான கமிஷனின் கால அவகாசத்தை மோடி அரசு 19-வது முறையாக நீட்டித்துள்ளது. இதன்படி ஜூன் 2013 வரை கமிஷன் தனது விசாரணையைத் தொடரும்.
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு முஸ்லிம்கள் திட்டமிட்டு பழியை சுமத்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாத காட்டுமிராண்டிகள் மோடியின் தலைமையில் கொன்று குவித்தனர்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணைக் கமிஷனை மாநில அரசு அமைத்தது. 2008ஆம் ஆண்டு இந்த கமிஷன் தனது விசாரணையின் ஒருபகுதியை அறிக்கையாக அளித்தது. அதில் கோத்ரா ரயில் நிலையத்தில் வைத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி எரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சாதகமான அறிக்கையாகும். ஏனெனில் ஓய்வுப் பெற்ற நீதிபதி பானர்ஜி தலைமையிலான கமிஷன் நடத்திய தீவிரமான ஆய்வில் ரெயில் பெட்டிக்கு வெளியே இருந்து எரிபொருள் ஊற்றப்படவில்லை என்பது நிரூபணமாகியிருந்தது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக