Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 ஜனவரி, 2013

பலதாரமணத்தை திருக்குர்ஆன் அனுமதிக்கிறது! ஆனால் ஊக்கமளிக்கவில்லை – டெல்லி உயர்நீதிமன்றம்!


பலதார மணத்தை திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. எனினும் அதற்கு ஒருபோதும் ஊக்கமளிக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே திருமணமான நபருக்கு 2-வதாக ஒரு பெண்ணை கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சித்த வழக்கில் கைதான மவ்லவி முஸ்தஃபா ராஜா என்பவரின் முன் ஜாமீனை ரத்துச் செய்து தீர்ப்பளிக்கையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்யலாம் என்று திருக்குர்ஆன் கூறுவதாக தெரிவித்த மவ்லவியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தைகளை பாதுகாக்கும் திறன் இல்லாமை, சுகவீனமோ அல்லது இதர காரணங்களோ போன்ற சூழ்நிலைகளில்தான் இஸ்லாமிய நாடுகளில் கூட 2-வது திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், எங்கும் பலதார மணத்தை ஊக்கமளிக்கும் வழக்கம் இல்லை என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கமினி லவு கூறினார்.
கடந்த ஆண்டு இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. மனைவியின் அனுமதியில்லாமல் நதீம் கான் என்பவருக்கு டெல்லியைச் சார்ந்த பெண்மணியை திருமணம் செய்து வைக்க துணை புரிந்தார் என்பது மவ்லவி மீதான அரசு தரப்பு வழக்காகும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக