Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 3 ஜனவரி, 2013

பணத்துக்கும் பதவிக்கும் ஆசைபட்டு கட்சியில் இணைந்திருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விடலாம்: அபூபக்கர்


 மூன்றாண்டு உழைப்பில் 23 மாநிலங்களில் வேரூன்றியுள்ளது எஸ்.டி.பி.ஐ., தூய்மையான உள்ளத்துடன் செயல்படுத்தப்படும் காரியங்கள் யாவும் வெற்றிபெறும், பணத்துக்கும் பதவிக்கும் ஆசைபட்டு கட்சியில் இணைந்திருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விடலாம் என்றார், அபூபக்கர்.
"Political Empowerment of Minorities" எனும் தலைப்பில் மைசூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. சார்பாக நடத்தப்பட்ட கன்வென்ஷனில் கலந்துக்கொண்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர், அபூபக்கர் பேசுகையில்:

நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம் சமூகம் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கண்துடைப்பு கமிஷன்கள் அமைக்கப்படுவதும் அதையும் செயல்படுத்த மறுப்பதும் தான், வாடிக்கையாக உள்ளது.
ஆண்டாண்டு காலமாக நடந்துவந்த இந்த அநியாயங்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண, துவங்கப்பட்டது தான் எஸ்.டி.பி.ஐ.
இறையருளால்,கட்சி துவங்கி மூன்றாண்டுகளுக்குள் 23 மாநிலங்களில் வேரூன்றியுள்ளோம்,என்றார்.
நாம் உணர்வு பூர்வமாக செயல்படுபவர்களே தவிர உணர்ச்சி வசப்படுபவர்களல்ல.
பணத்துக்கும் பதவிக்கும் ஆசைபட்டு கட்சியில் இணைந்திருப்பவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி விடலாம், அத்தகையவர்களுக்கு இங்கு இடமில்லை என்றார்,அபூபக்கர்.

கர்நாடக மாநில தலைவர் அப்துல் மஜீத் பேசும்போது :
நாம் இரு பெருநாட்களில் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொள்வதை போல, ஒன்று பட்டு செயல்பட்டால் நம்மால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை.
இன்னும் நூறாண்டுகளானாலும், காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் நம்மை புறக்கணித்துக்கொண்டு தானிருக்கும்.
மாநிலத்தில் பல கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் 9 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களும், சமுதாயத்துக்காக ஒன்றுபட்டு செயல் பட்டதுண்டா? எனக்கேள்வி எழுப்பினார், அப்துல் மஜீத்.
பாடபுத்தகங்களில் முஸ்லிம் விரோத கருத்துக்கள் உள்ளன.
டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் கட்சிகள், எப்போதாவது முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக போராடியதுண்டா?
இப்படி, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதற்கு எதிராக ஒன்றுபடவேண்டியது அவசியம் என்றார்,அப்துல் மஜீத்.

திருமறை குர்-ஆன் ஓதி துவங்கப்பட்ட நிகழ்ச்சியில், தேசிய துணைத்தலைவர், வழக்கறிஞர் சாஜித் சித்தீகி, மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹன்னான் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
SDPI LBK (செய்தி மறுப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக