Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 ஜனவரி, 2013

நேரடி ரிப்போர்ட்


நேரடி ரிப்போர்ட்

 நவாப் கோட்டையில் தப்போதைய நிலை என்ன என்பதை பற்றி நமதூர் வாசிகளுக்கு தொரியபடுத்தும் விதமாக நமது நிருபர் குழுவுக்கு வாசகர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நமது நிருபர் குழுவுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது நமது அமீரக நிருபர் அவர்கள் நாம் ஏன் நிருபர்களை நேரடியாக அனுப்பக்கூடாது?என்ற வினாவை முன் வைத்தார்.ஆம்! நாம் நிருபர்களை நேரடியாக அனுப்புவோம் என ஆசிரியர் குழுவில் முடிவானது.
அதன் அடிப்படையில் பல சிரமங்களுக்கு மத்தியில் நாம் நமது நிருபர்களை அனுப்புவது என முடிவு செய்தோம்.மிகுந்த சிரமத்தை எடுத்து செய்திகளை சேகரித்து நமதூர் வாசிகளுக்கு கொடுத்துள்ளோம்.நமதூர் இணையத்தளத்திற்கு முன்மாதிரியாக நேரடியாக சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டு வந்துள்ளோம். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற நமது இணையத்தளத்தின் மற்றுமொரு முயச்சிதான் இது. வாசகர்கள் தங்களின் ஆதரவு மற்றும் கருத்துகளை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                         --- ஆசிரியர் குழு
 நவாப் கோட்டை என்ற பெயரை கேட்டால் பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளும்,இரம்மியமான தூண்களும்,அவற்றிற்கு மேலும் அழகு சேர்க்கும் பச்சை நிற போர்வைகளும்,கண்களை கவ்வி இழுக்கும் மலர்த் தோட்டங்களும் தான் அனைவரின் கண்முன்னாலும் நிழலாடும்.
எழில் கொஞ்சும் நவாப் கோட்டை ,இன்று...
திரந்த வெளி மதுபான கடையாக மாறியுல்லது. பாராமறிப்பு இல்லாமல் கோட்டையின் சுவர்கள் அனைத்தும் பலுதடைந்து உள்ளது. கோட்டைக்கு இந்திய தொல் பொருள் ஆய்வுக்களத்தின் பராமரிப்பில் உள்ளது என அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த மாதிரி எந்த ஒரு தோற்றமும் அங்கோ காணவில்லை.
பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்களுக்கு 100 மீட்டர் தொலைவில் எந்த ஒரு கட்டிடமும் கட்டப்படக் கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் கூறுகிறது. இவ்வாறு இருக்கும் போது கோட்டையில் உள்ள பகுதியில் எப்படி கோயில் உறுவானது? எப்போது உறுவானது?
கோட்டையை பற்றி ரஞ்சன்குடி கொட்டையில் ஒரு முதியவரை நமது நிருபர் பேட்டி எடுத்தனர். அந்த கோட்டையின் நிலை பற்றியும் அதில் உள்ள பள்ளி வாசல் பற்றியும் கேட்டரிந்தனர்.
அதற்கு அந்த முதியவர் இந்த கோட்டையில் இரண்டு பள்ளி வாசல்கள் உள்ளன. ஒன்று கோட்டையின் மேல் பகுதியிலும்,மற்றொன்று கீழ் தளத்திலும் உள்ளன.இந்த பள்ளியில்தான் ஜூம்மா தொழுகையும்,இரண்டு பெருநாள் தொழுகையும் நடைபெற்று கொண்டு உள்ளன.அதற்கு நமது நிருபர் நல்லது.அப்படியோ செய்து வாருங்க! என்றார்கள்.  அதற்கு அந்த முதியவர் புன்முறுவளோடு இன்ஷா அல்லாஹ் என்றார்.

குறிப்பு இதை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய அமைப்புகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்பட நமது இணையதளம் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
நேரடி ரிப்போர்ட்-நமது நிருபர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக