Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 ஜனவரி, 2013

அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி குவைத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் !!!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மரணப்படுக்கையில் போராடும் கோவை சிறைவாசி அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி 
குவைத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் !!!

கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள அபுதாஹீர் SLE எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு 
அவரின் கிட்னி, இருதயம், உள்ளிட்ட பல  முக்கிய பாகங்கள் செயலிழந்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெரும் 
வகையில் அவருக்கு மூன்று மாதங்கள் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தி அபுதாஹீரை 
பரோலில் அனுப்பவேண்டிய தமிழக அரசும், சிறைத்துரையும் பாரபட்சம் காட்டி வருகிறது. 

அபுதாஹீரின் பரோல் ஆணைக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அவரை உடனடியாக பரோலில் விடுமாறு மாநில தலைமைச் செயலாளருக்கும் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தமிழக அரசு அபுதாஹீரின் விசயத்தில் அலட்சியம் காட்டி வருவதால் தமிழக அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் அபூதாஹீரை மனிதநேய அடிப்படையிலும் சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள  சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையிலும் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறன்றன. அந்த வரிசையில் அபுதாஹீரின் விடுதலை வேண்டி கடல் கடந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 11-01-2013 வெள்ளியன்று குவைத் தலைநகர் மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள  தஞ்சை உணவகத்தில், மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அரங்கத்தில் வைத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக   மாபெரும் கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இஸ்லாமிய மாணவர் பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, காயிதே மில்லாத பேரவை, இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் இந்தியா பிரண்டிநிட்டி ஃபார்ம், ஆகிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

கலந்து கொண்ட ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளும் அபுதாஹிரை விடுதலை செய்யவேண்டும், அதற்காக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி, தமிழக அரசை வலியுறுத்தி பல வீரியம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்காக குவைத்தில் இருக்கும் தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகள் தாங்கள் சார்ந்து இருக்கும் அமைப்பு மற்றும் கட்சிகளை  வலியுறுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது,

அதை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஈமெயில் அல்லது FAX அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

நன்றி ஆன்லைன்செங்கிஸ்கான்.காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக