Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நாம் காலம் காலமாக சொல்லும் விசயம் அதுதான்!

நாம் காலம் காலமாக சொல்லும் விசயம் அதுதான்!
நமதூரில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும் இந்த ரேசன் கடை விநியோகம் மட்டும் மாறாமல் உள்ளது. இது மென்மேலும் பொதுமக்களுக்கு பிரச்சனைகளைத்தான் உண்டாக்குகிறது. குழந்தை வைத்திருப்பவர்கள், வயதானவர்கள், மற்றும்  பெண்கள் இந்த சிரமத்தையும் சகித்துக்கொண்டு வாழ்வதை பார்க்கும் பொழுது நமக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பலமுறை நாம் பலருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தாலும், ஆட்சிதான் மாறுகிறது (ரேசன் கடை முன் போட்டோ தான் மாறுகிறது). பொதுமக்களின் நிலை மட்டும் மாறாமல் உள்ளது இதற்க்கு யார்காரணம் என்று சற்று சிந்திப்பீர்.
கடை மூடினாலும் பரவாஇல்லை வரிசையில் நின்றால்தான் பொருட்கள் கிடைக்கும் என்று பொதுமக்கள் வரிசையில் காத்துக்கிடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு நமதூர் ஜமாத்தும் சரி பேரூராட்சியும் சரி என்ன செய்து கொண்டுள்ளது. இதை வாடு உறுப்பினர்களிடம் கேட்டால் இன்னும் எங்களுக்கு வாடு உறுப்பினர் அடையாள அட்டை கூட வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். பொங்கலுக்கு பொருட்கள் தருகிறோம் என்று கூறியதும் பொதுமக்கள் சிரமத்தை பாராமல் காத்துக்கிடக்கும் அவலநிலை.  சம்மந்த சம்மந்த இல்லாத விசயத்தில்  ஊரை முன்னேற்றுகிறோம் என்று கூறாமல் இதற்க்கு ஒரு தீர்வு எடுக்கவேண்டும் என்பதுதான் பாம்பரமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
நமது நிருபர்.

3 கருத்துகள்:

  1. என்னபா நீங்க சொல்லி மாரிடுமோ.? நமதூர் வாசிகளே இந்த அவலை நிலை மாற வேண்டும் என்றால் உங்களுடைய கருத்தை இதில் பதியு செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் மாறும் உங்களின் பதிவை பொருத்து அமையும். இந்த முகநுள்லை பார்த்துக்கொண்டுருக்கும் நமதூர் பஞ்சாய்த்து தலைவர் இதை செய்கிறார்றா என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  2. NEED SHADED Q WITH SITING FACILITY

    பதிலளிநீக்கு
  3. only one option..no need for free goods...

    பதிலளிநீக்கு