இதை யார் தட்டி கேட்பது.
நமதூரில் சில காலங்களாகவே அதிகரித்து வரும் பேருந்துநிலைய குடிமகன்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இந்த நிலை தினமும் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது ஆட்கள் நடமாட்டம் இருக்கும் நேரத்திலும் அதிகரித்து வருகிறது். இது தினமும்
சுற்றுவட்டார ஊரில் உள்ளவர்கள் நமதூரில் பேருந்து நிலையம் கடைதின்னையில் அமர்ந்து மது குடித்துவிட்டு தன்னுடைய சுய நினைவுகளை இழந்து அங்கேயே இரவு களிப்பதும் உண்டு சிலர் தங்கள் ஊருக்கு செல்வதும் உண்டு. ஆனால் நாம் கூறுவது என்னவென்றால் இவர்களோடு சேர்ந்து நமது ஊர் ஆட்களும் பேருந்து நிலையத்தில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துக்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் மது அருந்தினால் மானக்கேடான காரியம் என்று என்னிய நமது ஜமாத்துக்கள் இன்று இதை ஊர்காவல்படை மூலமாகவோ அல்லது பஞ்சாயத்து அலுவலகம் மூலமாகவோ கேட்காமல் இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது. வெள்ளி ஜீம்மாவில் மட்டும் இதைபற்றி பேசாமல் களம் இறங்கி அநீதியை தடுத்தால் மட்டுமே இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது அறிவு ஜீவிகளின் கருத்தாக உள்ளது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக