கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்ட வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார். கோத்ரா ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உள்ள வீட்டில் அவரது மரணம் நிகழ்ந்தது. நீரழிவு நோயால் அவதிப்பட்ட உமர்ஜியின் கால் செயலிழந்தது.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக துயர்துடைப்பு முகாம்களை திறந்து பணியாற்றுவதில் முன்னணியில் இருந்த உமர்ஜியை 2003-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் தீவைப்பு வழக்கில் மோடி அரசு அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் முக்கிய சூத்திரதாரி என குற்றம் சாட்டி எட்டு ஆண்டுகளாக உமர்ஜி அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.
ஆன்ம தைரியத்தின் சின்னம் உமர்ஜி என்று பிரபல சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
INNA ILLAHI VA INNA ILAIHI RAJIYOON
பதிலளிநீக்கு