Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 12 ஜனவரி, 2013

பிரசவ வலி...


மக்காவில் இறைப்பணியாற்றிக் கொண்டிருந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பு இருந்தது. இஸ்லாத்தின் எதிரிகள் கடுமையான அழுத்தம் கொடுத்தும் ஹாஷிம் குடும்பம் அண்ணலாருக்குக் கொடுத்து வந்த பாதுகாப்பைப் பின் வாங்கவில்லை.
எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தன.அவற்றையெல்லாம் ஹாஷிம் குடும்பத்தார் பொருட்படுத்தவில்லை.ஆனால் அபூதாலிபின் மரணம் நிலைமையைத்
தலைகீழாக மாற்றியது. அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தை நிர்வகித்தவர்கள் அண்ணலாரைச் சிறிதும் பிடிக்காதவர்கள். அண்ணலாருக்கு அவர்கள் அளித்து வந்த பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி விட்டது.
அண்ணலாரின் ஒன்று விட்ட சகோதரர் அப்பாஸ் மூலமாகவும், அன்புத் தோழர் அபூபக்கர் (ரலி…) அவர்களின் சமூக உறவுகள் மூலமாகவும் அண்ணலார் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முயற்சிகள் மேற்கொண்டார்கள்.
ஹஜ்ஜுக்கு வந்த சில கோத்திரத்தாரோடு அண்ணலார் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பனூ ஆமிர் கோத்திரம் ஓர் ஒப்பந்தத்திற்கு தயாரான சமயத்தில்தான் புஜ்ரா என்பவர் இடைமறித்தார். ஆட்சியில் இருந்தது அவருக்குக் குறி.
“தங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தந்து, அல்லாஹ் தங்களுக்கு வெற்றியை நல்கினால் ஆட்சியதிகாரத்தை எங்களுக்குத் தருவீர்களா?” என்று புஜ்ரா கேட்டார்.
அப்படியொரு ஆளுமையை அளிக்க அண்ணலார் விரும்பவில்லை. “ஆட்சியதிகாரம் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது. தான் நாடியவருக்கு அல்லாஹ் அதனை வழங்குகிறான்” என்று அண்ணலார் கூறினார்கள்.
அத்தோடு பனூ ஆமிர் கோத்திரத்தார் பின்வாங்கி விட்டார்கள். அரேபியாவில் இன்னொரு சக்தியாக விளங்கியது ரபீஆ கோத்திரம். அண்ணலாரின் வார்த்தைகளை அவர்கள் பூரணமாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் சில அரசியல் காரணங்களால் அண்ணலாருக்குப் பாதுகாப்பு கொடுக்க அவர்கள் அஞ்சினார்கள்.
அரபிகளுக்கெதிராக உதவி செய்யலாம். ஆனால் பாரசீகத்திற்கு எதிராக முடியாது. பாரசீகச் சக்கரவர்த்தியின் ஆளுமையை அங்கீகரித்துதான் அவர்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். அரபிகளிடமிருந்து மட்டும் பாதுகாப்பு தர ரபீஆ கோத்திரத்தார் முன் வந்தார்கள்.
அண்ணலார் இந்தப் அரைகுறை பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. பூரண மனமில்லாமல் ஒரு ஆளும் இஸ்லாத்தில் உறுதியாக நிற்க முடியாது என்று அண்ணலார் எண்ணினார்கள்.
உதவி முக்கியமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் கூட அண்ணலார் நீக்குப்போக்குகளுக்கு வழி வகுக்கவில்லை. சுதந்திரச் சூழ்நிலையிலேயே அண்ணலார் இஸ்லாத்தை வளர்த்தெடுத்தார்கள்.
அதே மனோபாவத்திலேயே அது பற்றிப் படரவும் செய்தது, நீண்ட காலம் நிலைநிற்கவும் செய்தது.
ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்திடம் அரைகுறையாக ஈடுபாடு காட்டுவதை இஸ்லாம் நயவஞ்சகம் எனக் கணிக்கிறது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்குப் பிறகுள்ள காலகட்டத்தில் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. முஸ்லிம் சாம்ராஜ்யங்களை ஏகாதிபத்திய சக்திகள் விழுங்கி ஏப்பம் விட்டன. அரசியல் நடவடிக்கைகளில் சுதந்திரமான எந்தவிதப் பங்கும் அளிக்காமல் முஸ்லிம் நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளின் கர்ப்பப்பைக்குள் முடங்கிக் கிடந்தன.
சொந்த உழைப்போ, நடவடிக்கையோ எதுவும் இல்லாமல் கர்ப்பப்பையில் முடங்கிக் கிடந்த முஸ்லிம்கள் இன்னும் கீழே கீழே போனார்கள். சுகமான நித்திரையில் ஆழ்ந்து கிடந்தார்கள். ஆக, உலகத்தில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் அவர்களுக்குப் பங்கில்லாமலேயே போனது.
சூழ்நிலை மீண்டும் மாறுகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் கர்ப்பப்பைகளில் பாரங்கள் ஏறுகின்றன. பிரசவ வலியின் அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன. கர்ப்பப்பை தன் உள்ளே உள்ளதைக் கக்கத் தயாராக இருக்கிறது.
இந்தப் பிரசவ வலி உலகமெங்கும் வியாபிக்கத் துவங்கியிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் பிரசவங்கள் ஆரம்பிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக