Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 16 ஜனவரி, 2013

தேடிவரும் (மொபைல்) பள்ளி வாசல்!

ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.


படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள'கார்னிச் பீச்' என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.
இந்தப் பள்ளி வாசலின் முக்கிய நோக்கம்... அசர்,,மஃரிப், இஷா தொழுகைகளை சிலர் இதுபோன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு செல்லும் போது வஃக்துக்கு தொழ இயலாமல் தொழுகையை இழக்க நேரிடும் அவ்வாறான சூழல்களில் இந்தப் பள்ளிவாசல் வஃக்துக்கு தொழுகையை நிறைவேற்ற உதவி புரிகின்றது.

இதன் வசதிகள்.:

ஒரு பள்ளி வாசலில் இருக்கும் பாங்கு சொல்ல மைக் ஸ்பீக்கர்.. உளூ செய்ய தண்ணீர்,,, முஸல்லாக்கள் ,, ..நூற்றுக்கணக்கனோர் நின்று தொழும் வகையில் விரிப்புகள். இன்னும் பள்ளிவாசலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. மேலும் இதற்குள் கழிப்பிட வசதியும் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்தப் பள்ளிவாசலை, ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகன சேவையைப் போல், மறுமைக்கு முக்கிய காரணியான தொழுகையை நிறைவேற்ற இதுபோன்ற மொபைல் பள்ளி வாசல்களுக்கும் நம் சமுதாய அமைப்பினர் முயற்சி செய்யலாம்.

தகவல் மின்னஞ்சல் மூலமாக 
AGM Basha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக