அன்மையில் தலை நகர் டெல்லியில் இளம்பெண்
கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது இறந்த செய்தி இன்று
நட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் பெரும் தலைவலி ஏற்படும்
அளவிற்கு போராட்டங்கள் தினம் தினம் தொடர்கின்றன. இக்குற்ற செயலுக்காக
சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்
என்று தலைவர்களால் பேசப்படுகிறது. இது போன்ற குற்றம் இனி
நடைபெறக்கூடாது என்று நீதிமான்களும் பேசிவருகின்றனர். ஆனால் இந்திய அரசால்
இக்குற்றத்தை முற்றிலும் அல்ல ஓரளவிற்கு கூட தடுத்துவிடமுடியாது. ஆம் இந்தியாவில்
நிலை அந்தளவிற்கு மோசமாக உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும்
ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த
தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறாள். இந்த கற்பழிப்பில்
ஈடுபடுபவர்கள்: நாட்டை பாதுகாக்கும் இராணுவம்,
நாட்டு மக்களை பாதுகாக்கும் காவல்துறை,
நாட்டின் ஆட்சி
அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிபர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பெண்ணின் தந்தை மேலும் அதிகாரமற்றவர்களில்
சிலர் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. சில நடுநிலையாளர்கள் அரபு
நாடுகளைப் போல் இக்குற்றத்தில் ஈடுபடும்
குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூறுவதுண்டு.
அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் பொழுது எப்படி
குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பார்கள்?
ஒரு கால் கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு
என்று சிறப்பு படை அமைத்தால் ஆளும் கட்சியினர்,
எதிர்கட்சியினர் உட்பட பல கிரிமினல்களுக்கும் மரண தண்டனை
நிறைவேற்ற வேண்டியது வரும்.நம் நாட்டில் நடக்காத ஒரு சமூக கொடுமை நடந்துவிட்டது போல் டெல்லியில் பரபரப்பாக்கப்பட்டு வருகிறது. காரணம் கற்பழிக்கப்பட்டது மருத்துவம் படிக்கும் ஒரு உயர் ஜாதிவகுப்பை சார்ந்த இளம் பெண்.
அனுதினமும் கஷ்மீரில் பெண்கள், இளம் பெண்கள், சிறுமிகள் என்று கையில் அகப்படும் பெண்களின் கற்பை சூரையாடுவது என்பது கஷ்மீர் ஆப்பிள் சாப்பிடுவது போல் என்று வர்ணிக்கும் இந்திய இராணுவத்தை கண்டித்து இது போல் போராட்டம் நடத்த அனுமதித்தது உண்டா? குஜராத்தில் காப்பாற்றுங்கள் என்று காவல் துறையினரை பார்த்து கெஞ்சிய நமது சகோதரிகளின் கையை பிடித்து சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளிடம் ஒப்படைத்த காவல்துறையினரை தண்டிப்பது போன்ற செய்திகளை தீர்ப்புகளாக, மின் ஊடகங்கள் தற்போது செய்தியை பரப்புவதுபோல் பரப்பியதுண்டா? அல்லது கற்பழிப்பிற்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பேசிய தமிழக முதல்வர் மதுரை புறநகரில் காவல்துறையால் காவல் நிலையத்தில் வைத்து கணவனை கட்டிப்போட்டு தலித் பெண்ணை கற்பழித்த காக்கி உடையில் இன்று பணியாற்றி வரும் ஓநாய்களைத் தண்டித்தீர்களா? இல்லை. காரணம் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்.
உண்மையில் இந்திய நாட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் காந்தியடிகள் கூறியது போல் உமர் (ரழி) ஆட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்பதை அமுல்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் அரபுலகை போல் தண்டிக்க வேண்டும். பெண்களும் தங்களின் கவர்ச்சிகலை மறைக்க வேண்டும். இது தான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக