Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 3 ஜனவரி, 2013

தீன் இயக்கம் எழுதும் கண்ணீர் கட்டுரை.

தீன் இயக்கம் எழுதும் கண்ணீர் கட்டுரை.
அஸ்ஸலாமு அலைக்கும் 
எனக்கு வெகு நாட்களாகவே என்னுடைய இரத்த சொந்தமாகிய மேற்கு ஜமாத்திடம் பேச வேண்டும் என்று ஆசையக இருந்தது. ஆனால் என்னை நிர்வகித்து கொண்டிருந்த பொருப்புதாரிகள் அனைவருமே என்னை வைத்துதான் தங்களுடைய முதல் மரியாதையை பெற்றுக் கொண்டனர்.
ஆனால் எனக்கு பின்னாடி பொரந்த அமைப்பாகிய தாருஸ்ஸலாமாகட்டும், தவ்ஹி்த் மர்கஸ்ஸாகட்டும் இன்னும் பல இதர இயக்கங்கள் ஆகட்டும், அவர்களை என்னோடு ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கு மிகுந்த அவமானமாக உள்ளது. இவர்களை காட்டிலும் எனக்குதான் மிகுந்த ஆள்பலம் இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் என்னையும் முன்னேற்றாமல் என்மூலம் ஊரையும் முன்னேற்றம் செய்யாமல் காலத்தை தள்ளி தள்ளி வைத்தே வந்து விட்டார்கள்.
என்னுடை இந்த நிலையை நினைத்து கண்கலங்கி கொண்டிருந்த பொழுதுதான், ஒரு அத்தா என்னுடை நிலையை கவணித்து நீ கண்கலங்காதே உன் பெயரிலே ஒரு வீரம் உள்ளது. அல்லாஹ் உன் பெயரை ஒரு பொழுதும் அழித்து விட மாட்டான். உன்னை வருத்தெடுக்கும் இவர்களின் நிலையை பார்க்கும் பொழுதுதான் எனக்கு வேடிக்கையாக உள்ளது. உன் மேல் அக்கரையுள்ள ஒரு இணையதளம் உள்ளது அவர்களிடம் நீ உன்னுடைய நிலையை பற்றி சொன்னால், அவர்களால் முடிந்த உதவியை செய்வார்கள். அவர்கள் ஏற்கனவே உன் மேல் அக்கரையுடன் சில கட்டுரைகள் வடித்திருக்கிறார்கள். 
அப்பொழுதுதான் என்மேல் அலவில்லா பாசம் வைத்திருந்த நமது இந்த இணையதளத்தை அனுகினேன். இதன் மூலம் நான் பொதுமக்களுக்கு குறிப்பிடுவது என்னவென்றால் தயவு செய்து என் பெயரை வைத்துக்கொண்டு பணத்தின் மேல் மட்டும் குறியாக இல்லாமல், சரியான முறையில் என் பெயருக்கு ஏற்றவாரு ஊரை முன்னேற்றம் செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் என் பெயரை எடுத்து விடுங்கள். இது நான் வாய் மொழியாக கூற வில்லை இதயத்தின் ஓரத்தில் கவலையில் கசிந்த இரத்தத்தின் வெளிபாடுதான் இந்த வார்த்தை.
இதற்கு மேலும் என்னை நீங்கள் சரியான முறையில் வழி நடத்தவில்லை என்றால் எனக்கு நீங்கள் செய்யும் அனைத்துமே நான் என்னுடைய இருதி சடங்காக கருதுகிறேன்.
இப்படிக்கு 
கண்ணீர் மல்கும் தீன் இயக்கம்.

3 கருத்துகள்:

  1. lbk சமூகம் எழுதுவது
    தீன் இயக்கமே! இதே இணைதளத்தில் ’எங்கே செல்லும் இந்த பாதை’ என்ற ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதை படித்தீர்களா! ஒரு ஜுமாஆ வாரத்திற்கு மேலாக பள்ளிவாசல்களின் வளாகத்தில் இதே அறிவிப்பு காட்சியளிக்கிறது. அறிவிக்கப்பட்டவை சமூக சீர்கேடான விசயமில்லையா! உனக்கு சமுதாயத்தின் பேரில் அக்கரையிருக்குமாயின் ’எங்கே செல்லும் இந்த பாதை’ வந்துள்ள நேரத்தில், உன்னைப்பற்றிய மனசாட்சி கட்டுரையை எழுதுவாயா! மனசாட்சியில்லாதவன் என்பதை காட்டிக் கொள்ளவா! முதலில் உன்னை சமூக செவகனாக காட்டிக் கொள். துணிவிருந்தால் மக்கள் மத்தியில் உன் கருத்தை ’எங்கே செல்லும் இந்த பாதை’ பற்றி வெளியிடு. மக்களுக்கு சேவை செய். மணிதனுக்கும், கட்டிடங்களுக்கும் உன்சேவைகளை விடுப்பு செய். உன் செயலால் lbk சமூகமாகிய நான் நலம் பெறுவேன். அல்லாஹ் உன்னை மெச்சி உயர்துவான். மாறாக, பொதி சுமப்பதுதான் உன் வேலை என்று தொடர்ந்து செய்யாதே!
    துஆ செய்யும் lbk சமூகம்.

    பதிலளிநீக்கு
  2. assalamu alaikum ungalathu kavalai kandu varuthu kiran. Kaikum maram kal ladi padum. Salai kamal unnathu sevai yai sei. Intha vulagil ellai endralum maruma yel kidaikum. Melum ungalai pola nanum. unkalathu sevaikaga nanum pangatuppan. bd shahul hameed (10 ward counciler)

    பதிலளிநீக்கு