Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?பாரதிராஜாவுக்கு TNTJ கேள்வி..


தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா? எனவே ,விஸ்வரூபம் படம் தொடர்பாக நடுநிலையுடன் இயக்கநர் பாரதிராஜா பேசவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் சையத் இல்பால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

விஸ்வரூபம் படம் தொழில்நுட்பத்திலும்,கதை சொல்லும் வித்த்திலும் சிறப்பாக இருப்பதால்,அதனை வெளியிட வேண்டும் என்று பாரதிராஜா சொல்கிறார்.
கமல் திறமையான கலைஞர் என்பதை நாங்கள் மறுக்க வில்லை.
அதே நேரத்தில்தங்க ஊசிஎன்பதற்காக கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா?
காவல்துறையும்,அரசையும்விட முஸ்லிம்களை தவறாக அடையாளப்படுத்திப் பார்த்தவர்கள்,திரைத்துறையினர்தான்.
கமல் என்கிற தனிமனிதன் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை.
அவர் தயாரித்திருக்கின்ற படத்தின் காட்சி அமைப்பகளும்,கதை சொல்லும் பாணியும்தான்,அவருக்கு எதிராக அணி திரள வைத்திருக்கிறது.
பாரதிராஜா அவர்களே நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக