Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 நவம்பர், 2014

2015-ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது ‘வாட்ஸ்–அப்’


தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது. 

‘வாட்ஸ்–அப்’ இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி ‘வாட்ஸ்–அப்’பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வாட்ஸ் அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் வாட்ஸ் அப் 4.5.5 பதிப்பில் வெளியாகுகிறது. பிரபலமான வாட்ஸ் 600 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சேவை அளிக்கப் பட்டால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக