Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 9 நவம்பர், 2014

2016 சட்டமன்ற தேர்தல் பல கட்சிகளுக்கும்

2016 சட்டமன்ற தேர்தல் பல கட்சிகளுக்கும் 

முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சக்திகளாக திகழ்கிறது.
அதற்கு காரணம் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒருங்கிணைத்து மிகப்பெரிய வெற்றிபெறுகிறார்கள்.
அதனால் தான் ஆட்சி மாறிமாறி வருகின்றன.

1996 ல் திமுகவும், 2001 ல் அதிமுவும், 2006 ல் திமுகவும், 2011 ல் அதிமுகவும் பலமான கூட்டணி அமைத்து கூட்டணி பலத்தின் மூலமே இரு கட்சிகளும் வெற்றி பெறுகின்றன என்பதுதான் உண்மை.

2014 நாடாளமன்ற தேர்தலில் மட்டும் அதிமுக தனித்து நின்று பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு எதிர்கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதும் ஒரு காரணமாக இருக்கிறது.

இப்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுகவிற்கு சொத்து குவிப்பு வழக்கும், திமுகவிற்கு 2ஜி உள்ளிட்ட வழக்குகளும் உள்ளது. 
அதனால் மக்கள் மாற்று சக்தியை எதிர்பார்கிறார்கள்.

உதாரணமாக 2014 நாடாளமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்ட கூட்டணி 75 லட்சம் வாக்குகள் வாங்கியது கவனிகதக்கது.

2016 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக பாஜக இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்தாலும், தேசிய பாஜக தலைமை ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடதான் விரும்பும். 
அது திமுக வுடன் கூட்டணி வைக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. திமுக, பாமக, மதிமுக, பாஜக இன்னும் சில கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கலாம்.

இந்த கூட்டணிக்கு எதிராக அதிமுக தனித்து நிற்காமல் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும்.

இந்த சூழலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். அவர்கள் அதிமுக விடம் செல்ல வாய்ப்புண்டு.
அந்த கட்சியினர் சிலரும் முகநூளில் அடுத்த தேர்தலில் 
அதிமுக தான் வெற்றிபெறும் என்போதுபோல எழுதுகிறார்கள்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் அதிமுகவிடம் செல்லாமல் 
மாற்று அணி அமைக்க வேண்டும். 

அதில் தலித்கள் அமைப்புகளையும், இஸ்லாமிய அமைப்புகளையும், தமிழர் நலனுக்காக போராடுகிற அமைப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். 

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள், SDPI, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த கூட்டணி ஏற்பட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய 
மாற்றத்தை கொண்டு வரலாம். 
நாம் ஆட்சிக்கு வராவிட்டாலும், நம்முடைய வாக்குபலத்தின் மூலம் மற்றகட்சிகளை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
அதன் மூலம் நம்முடைய கோரிக்கைகளை வெற்றிபெற வைக்க 
அதை வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு சமூகங்களுக்கும் ஒரே எதிரிதான்.
அவர்கள் இன்று வளர்ந்து வரும் சூழலில்  
இந்த கூட்டணி இன்றைய காலத்தின் தேவை.

இதுநாள் வரை இந்த முயற்சியை செய்யவில்லை.
வருகிற தேர்தலில்  முயற்சி செய்யலாம்.

- வி.களத்தூர் பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக