Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 நவம்பர், 2014

இஸ்லாமிக் நர்ஸரி - பிரைமரி - மேனிலைப்பள்ளிகள்


இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கும் வழக்கம் மேம்பட்டிருந்த காலத்தில் முஸ்லிம்களின் வாழ்வு மேம்பட்டிருந்தது. இஸ்லாமியக்கல்வியைமுஸ்லிம்கள் அலட்சியப்படுத்திய காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த கேவலத்தையும் அவமானத்தையும் வார்த்தைகளால் வடித்துவிட இயலாது. இந்த 1434 ஆண்டு வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 150 ஆண்டுகளாக முஸ்லிம்கள் சந்தித்தது போல துன்பங்களை,வேதனைகளை வேறு எந்தச் சமூகமும் சந்தித்தது கிடையாது. அதிலும் குறிப்பாக விடுதலைக்குப் பிறகான இந்த 66 ஆண்டுகளாக முஸ்லிம்களிடம் நிலைபெற்றிருக்கின்ற கல்விசமூகபொருளாதார பின்னடைவுகளும், “நாட்டின் வளர்ச்சிக்கு சுமையாக உள்ள சமூகம்” என்ற அவமானமும் ஏற்பட முழு முதற்காரணம் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கல்வியை புறந்தள்ளியதே.
தொடக்கத்தில் இந்திய அரசு திட்டமிட்டு முஸ்லிம்களை இஸ்லாமியக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்தியது. காலப்போக்கில்இஸ்லாமியக் கல்வி மற்றும் கலாச்சாரத் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் மிகப் பெரும் பொறுப்பை சுமந்த மதரஸாக்களும் முஸ்லிம்களை இஸ்லாமியக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்தியது.மதரஸாக்கள் முஸ்லிம்களின் சமூக வாழ்வியல் தேவைகளை கவனத்தில் கொண்டு இறைவனின் உத்தரவின்படி மாறுகின்ற உலக மாற்றத்திற்கேற்ப இஸ்லாமியக் கல்வியை அதன் வடிவத்தை வளப்படுத்த மறுத்தன. எதிர்விளைவாக முஸ்லிம்கள் தங்கள் உயிரின் உயிரான மதரஸாக்களை மறந்து யூதநஸரானிகளின் கல்வித்திட்டத்தில் கரைந்தனர் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் வாழ்ந்த முதிர்ச்சி பெற்ற உலமாக்கள் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்த்து தங்களது பொறுப்பில் உள்ள மதரஸாக்களை இஸ்லாமியக் கல்வியை கற்பிக்கும் வடிவத்தை அரபுலகின் மதரஸாக்களுக்கு நிகராக தரம் உயர்த்தி உள்ளனர்.இதனால் கேரளா போன்ற மாநிலங்களின் மதரஸாக்கள் முஸ்லிம்களால் நிரம்பி வழிகின்றன. தமிழக மதரஸாக்களின் நிலையோ நாளுக்கு நாள் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றான.
   கேரளா போன்ற மாநிலங்களில் மதரஸாக்களைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற பேச்சு குறைவாக ஒலிக்கிறது. அவை உலக இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகின்றன. தமிழக மதரஸாக்களின் மூடுவிழா நிலையைப் பார்த்து கவலையோடு முஸ்லிம் சமூகமும் மூத்த உலமாக்களும் கருத்துச் சொன்னால் சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. மாற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சிலர் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
   தமிழகத்தில் தற்போது இயங்கும் அரபு மதரஸாக்கள் இஸ்லாமிய உலகின் அரபு கலாசாலைகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட வேண்டும். மார்க்கக் கல்வியோடு பள்ளி இறுதித்தேர்வும் பட்டப்படிப்பும் இணைக்கப்பட்ட உயர்தரமான மதரஸாக்கள் புதிதாக தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட வேண்டும்.
மதரஸாக்களில் பட்டம் பெறும் ஆலிம்கள் கட்டாயம் ஓர் ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு (பி.எட்) படிப்பதற்கான திட்டம் மதரஸாக்களில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இது மதரஸாக்களில் இருந்து ஆலிம்கள் என்ற உயர்வான தகுதியோடு ஆசிரியர் என்ற மிக உயர்வான நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்லும். இதனால் தமிழக பள்ளிவாசல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய பாரம்பரியம் நிறைந்த ஜாமிஆ மஸ்ஜித் (பல்கலைக்கழக - பள்ளிவாசல்) என்ற பெருமையை மீண்டும் எட்டிப்பிடிக்கும் சூழல் உருவாகும்.
   இஸ்லாமிக் நர்ஸரி - பிரைமரி - மேனிலைப்பள்ளிகள் தமிழகம் முழுவதும் பெருக வேண்டும். அவற்றில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் பெண்கள் கல்வியாளர்களாக கல்வி நிறுவனங்களை நடத்தும் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். மார்க்கக் கல்வியும் இன்றைய உயர்கல்வியும் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது15 வது உருவாக்கப்பட வேண்டும்.
இந்தச் சமூக முன்னேற்ற செயல் திட்டங்கள் கடந்த 15 ஆண்டுகளாக சமூகநீதி அறக்கட்டளையின் சார்பில் தமிழக முஸ்லிம் சமூகத்தில் கருத்துக்களாக வைக்கப்பட்டு அவற்றிற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக இஸ்லாமிக் நர்ஸரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் மகளிர் கல்லூரிகள் புதிய மதரஸாக்கள் துவங்குவதற்கான வேலைகள் மிக மிக வேகமாக அதே நேரத்தில் நிதானமாக பொறுப்புணர்வோடு மூத்த உலமாக்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைப்படி நடைபெற்று வருகின்றன. சமூகநீதி அறக்கட்டளை..
மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக