Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 நவம்பர், 2014

பாஜக ஆளும் 9 மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்!

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 7 மாநிலங்களில் நேரிடையாகவும், 2 மாநிலத்தில் கூட்டணிவைத்தும் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.

குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாபில் பாஜக கூட்டணியுடன் அகாலிதளமும், சீமாந்திராவில்(ஆந்திரா) பாஜக கூட்டணியுடன் தெலுங்கு தேசமும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளன.
ஒட்டுமொத்த இந்த மாநிலங்களில் முஸ்லிம்கள் மக்கள் தொகை 8 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்த மாநிலங்களில் உள்ள முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவானதாகும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. அதாவது மொத்தமாக உள்ள 1359 எம்.எல்.ஏக்களில் வெறும் 22 எம்.எல்.ஏக்கள் மட்டுமே முஸ்லிம்கள் ஆவர்.
இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏவும் அதன் கூட்டணி கட்சியான அகாலிதளத்துக்கு ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இல்லை. ஒட்டுமொத்தமாக இந்த மாநிலங்களில் 151 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் இராஜஸ்தானில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற யூனுஸ்கான் மட்டுமே அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் 288 இடங்களில் போட்டியிட்ட பாஜக, ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பளித்தது. அவரும் தோல்வியடைந்தார். கடந்த ஆட்சியில் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் 3 பேர் முஸ்லிம் அமைச்சர்கள் ஆவர். தற்போது அந்த எண்ணிக்கை 9 ஆக சுருங்கிவிட்டது.
இதேப்போன்று ஹரியானாவில் 90 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 2 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தது. இருவரும் தோல்வியை சந்தித்தனர். கடந்த ஆட்சியில் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 முஸ்லிம்களில் ஒருவர் அமைச்சராவார். தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆக சுருங்கிவிட்டது.
பாஜக அதன் கூட்டணி அல்லாத  13 மாநிலங்களில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களின் எண்ணிக்கை 52 ஆகும்.
18.55 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பி.யில் 51 அமைச்சர்களில் 10 பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. 24.6 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி புரிகிறது. இங்கு 20 அமைச்சர்களில் 5 பேர் முஸ்லிம்கள் ஆவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்குவங்காளத்தில் 25 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். அங்கு 44 அமைச்சர்களில் 5 பேர் மட்டுமே முஸ்லிம்கள் ஆவர். பீகாரில் ஜிதன்ராம் மன்ஜி அமைச்சரவையில் 2 முஸ்லிம்கள் உள்ளனர். கர்நாடகா காங்கிரஸ் அமைச் சரவையில் 2 முஸ்லிம்கள் உள்ளனர்.
முஸ்லிம்களை பிரதிநிதிப்படுவடுத்துவதை தடுத்துவிட்டு, தேசியம் வளர்ச்சி என்று போலியான வாக்குறுதிகளை அளித்துவரும் பாஜகவின் தீவிர முஸ்லிம் விரோதப் போக்குதான் இத்தகைய வெளிப்பாடு என அரசியல் நோக்கர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக