Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 நவம்பர், 2014

மக்கள் நலனை விட வருமானம் முக்கியமா!

கடந்த ஆகஸ்ட் 17 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சியின் விவாத பொருள் - மருத்துவர்கள் கமிசன் தொகையை எதிர்பார்த்து தேவையில்லாத பரிசோதனைகளை (Test) நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர் என்பது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கோபிநாத் தவறான அறிவியல்பூர்வமற்ற கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்புகிறார் என்று மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து பொது மக்களின் மீது கொண்ட அளவு கடந்த அக்கறை! கோபமாக உருமாறி அவர்களை போராட்ட களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.
இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்புவது, தனியாக வெப்சைட் ஆரம்பித்து கருத்துக்களை பதிவு செய்வது, முகநூலில் கருத்துரைகளை பரப்புவது என்பதோடு நில்லாமல் தெருவில் இறங்கி போராடவும் ஆரம்பித்துள்ளது வீறு கொண்ட மருத்துவர் கூட்டம்.
இருந்தாலும் எம்.பி.பி.எஸ் படித்து முடித்தவுடன் மருத்துவர்கள் தமிழை மறந்து விட்டதால் சொல்லி வைத்தது போல் அவர்களின் பதிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளது. மக்களுக்கு புரியாது என்று தெரிந்திருந்தாலும் புரியாத மொழியில் மருந்துச் சீட்டு (prescription) எழுதுவது முதல், நோயை மக்களுக்கு புரியாத மொழியிலேயே பேசி பழக்கப்பட்டதால் அவர்கள் இப்படி செய்து இருக்கலாம். இருந்தாலும் எந்த மக்களுக்காக போராடுகின்றனரோ அவர்களிடம் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து கூற கீழ்கண்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
1. மக்களை தவறான முறையில் அறிவியல்பூர்வமற்ற செய்திகளை கூறி திசை திருப்புகிறார் என்று கோபிநாத் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள். அவர் வாங்கிய காசுக்கு பேசுகிறார் என்றும் கூறுகிறீர்கள். உண்மை தான். ஆனால் காம்ப்ளான் விளம்பரம் முதல் கக்கூஸ் கழுவும் திரவம் வரை அனைத்து விளம்பரத்திற்கும் யாராவது ஒருத்தர் டாக்டர் கோட் மாட்டிக் கொண்டு வந்து விளம்பரம் கொடுக்கிறார். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் தானா? அந்த மருத்துவர்கள் கூறுபவை அனைத்தும் உண்மையா? அவர்கள் எல்லாம் காசுக்காக மக்களை தவறாக வழிநடத்தவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துண்டறிக்கை கூட வந்ததில்லையே, ஏன்?
2. மக்கள் சுய மருத்துவம் மேற்கொள்ள கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கூறுகிறீர்கள். சின்ன தலைவலி, காய்ச்சல் என்றாலும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வாருங்கள், அது இரத்தக்கட்டி (hematoma), புற்றுநோய் (carcinoma), மலேரியா என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறீர்கள். ஆனால் தினசரி தலைவலிக்கு குரோசின் (crocin), காய்ச்சலுக்கு vicks action 500, மூட்டுவலிக்கு volini spray, உடல் சோர்வு, உடல் வலிக்கு நியூரோபின் (neurobion) என்று பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள், மக்களை சுயமருத்துவம் மேற்கொள்ள சொல்லி தூண்டுகிறதே! அவர்களை எதிர்த்து நீங்கள் வீறு கொண்டு எழாதது ஏன்?
3. இந்திய மருந்து சந்தையில், மருந்துகள் நுழைய பல கட்ட ஆய்வுமுடிவுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் cipla போன்ற சில மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுடன் கூட்டு சேர்ந்து முறைகேடான செயல்களில் ஈடுபட்டு தவறான ஆய்வறிக்கையை தயாரித்து சந்தையில் நுழைந்துள்ளன. இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஊடகங்களிலும் அந்த செய்தி வந்திருந்தது. இது மக்களை ஏமாற்றும் செயல் மட்டும் அல்ல, அந்த மருந்துகளை பரிந்துரை செய்யும் மருத்துவர்களையும் ஏமாற்றும் செயல்.
இப்போது கோபிநாத் என்ற தனி மனிதனுக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்த மருத்துவரும் அப்போது பன்னாட்டு நிறுவன்ங்களுக்கு எதிராக போராடவில்லையே ஏன்?
4. நீயா நானா நிகழ்ச்சியின் விவாத பொருளான, பரிசோதனை நிலையங்களிடமிருந்து கமிசன் பெறுவது என்பது மருத்துவர்களின் தொழில் தர்மம் (professional ethics) தொடர்பானது. இந்த professional ethics ஐ கண்காணிக்க கூடிய இந்தியாவின் உயர் அதிகார அமைப்பான Medical council of India வின் உறுப்பினராக உள்ளவர், கேதன் தேசாய். இவர் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்டவர். இவரிடமிருந்து கிலோ கணக்கில் தங்கமும், லாரி லாரியாக பணமும் கைப்பற்றப்பட்டது. ஆனால் இவரை இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) உறுப்பினராக குஜராத் மாநில மருத்துவ கவுன்சில் எதிர்ப்புகள் இல்லாமல் தேர்வு செய்துள்ளது. கேதன் தேசாயை தங்களது professional ethics ஐ கண்காணிக்கும் அமைப்பின் உறுப்பினராக அனுமதித்துள்ள மருத்துவர்கள், professional ethics குறித்து கேள்வி எழுப்பிய கோபிநாத் “எங்களின் கால் தூசுக்கு ஈடில்லை” என்று முகநூலில் பதிவிட என்ன தகுதி உள்ளது?
5. நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவர் அமைப்புகளில், IMA என்று அழைக்கப்படும் INDAIN MEDICAL ASSOCIATION னும் ஒன்று. இவர்கள், தங்களின் மேல்மட்ட அமைப்பான WORLD MEDICAL ASSOCIATION க்கு இந்திய பிரதிநிதியாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேதன் தேசாயை அனுப்பி வைத்துள்ளனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று இவர்கள் கூறுவது ஊரை ஏமாற்றும் வேலை இல்லையா?
இவை மட்டும் அல்ல, NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில்? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா?
வெளிநாட்டு கம்பெனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ், மல்டோவா, புரோடினெக்ஸ் ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலல்கடலையிலிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போகக் காரணம், கோக் மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
பீசா PIZZA பற்றி பார்ப்போம்; பீசா விற்கும் கம்பெனிகள் “Pizza Hut, Dominos, KFC, McDonalds, Pizza Corner, Papa John’s Pizza, California Pizza Kitchen, Sal’s Pizza” இவை அமெரிக்கன் கம்பெனிகள். PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி மற்றும் கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
பின்வரும் குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் காணப்பட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும்? E322–எருது, E422–ஆல்கஹால், E442– ஆல்கஹால் மற்றும் கெமிக்கல், E471–எருது & ஆல்கஹால், E476–ஆல்கஹால், E481–எருது & கோழி, E627–ஆபத்தான கெமிக்கல், E472–எருது, கோழி மற்றும் இறைச்சி, E631–பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
இந்த குறியீடுகளை (code) பெரும்பாலான வெளிநாட்டுக் கம்பெனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
கூகுள் தளத்தில், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904 (இந்த குறியீடுகளை குறித்துக் கொள்ளுங்கள்)

மேற்க்கண்ட பெரும்பாலான விளம்பரத்திற்கும் யாராவது ஒருத்தர் டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து விளம்பரம் கொடுக்கிறார். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் தானா? அந்த மருத்துவர்கள் கூறுபவை அனைத்தும் உண்மையா? அவர்கள் எல்லாம் காசுக்காக மக்களை தவறாக வழி நடத்தவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துண்டறிக்கை கூட வந்ததில்லையே, ஏன்?
டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து நடத்தும் இந்த வியாபாரங்கள், விளம்பரங்கள் ஆரோக்கியதை கெடுக்காது என்று கூறப்போகிறீர்களா? மக்கள் நலனை விடவா இவர்கள் கொடுக்கும் காசு உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக தெரிகிறது!
சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மருந்துகள் சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அரசே தடை செய்த போது, அந்த மருந்துகளுக்கு தடை நீக்கம் செய்ய போராடிய நீங்களா இதனை கண்டுகொள்ள போகிறீர்கள்?
மக்களே உங்கள் நலன் உங்கள் கையில்... நீங்கள் தெளிவாக இருந்தால் இந்த எந்த வியாபாரிகளாலும் உங்களை ஏமாற்ற முடியாது... இனி உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்...!
மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்!
மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்!!


டாக்டர். இராமச்சந்திரன்
தகவல்களை பதிவிட்ட நண்பர்கள்: மக்கள் நல மருத்துவ கூட்டமைப்பு, Muthuramalingam Subramanian, மற்றும் என்னுடன் ஷேர் செய்த நண்பர்கள்: Anandhan Palanisamy, Acu Healer Mohanraj, Acu Healer Balamurugan ஆகியோருக்கு என்னுடைய நன்றிகள்.
டாக்டர். இராமச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக