Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 நவம்பர், 2014

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பினர் 25000 பேர் கைது!

சென்னை: சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேரணி நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் 25000 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ராஜேந்திர சோழனின் 1000-வது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத சார்பில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தின் 7 முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த பேரணியால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் என்று கருதி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், பேரணிக்கு அனுமதி பெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு, ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மாதிரி உடை அணிந்து செல்லும் இப்பேரணியை அனுமதிக்க முடியாது என்று காவல்துறை கூறியது. ஆனால் பேரணி நடத்துவதில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தினர் உறுதியாக இருந்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக குவிந்தனர். எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை கைது செய்து 7 திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர். இந்த பேரணியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், பாஜக மூத்த தலைவர் இல. கணேசனும் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் அனைவரும் நேற்று இரவே விடுவிக்கப்பட்டனர்.
மதுரை
இதேபோன்று மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உட்பட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் 800 பேர், கிருஷ்ணகிரியில் 704 பேர், தருமபுரியில் 84 பேர், சேலத்தில் 650 பேர், நாமக்கல்லில் 300 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விருதுநகரில்
விருதுநகரிலும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு போலீசார் நிபந்தனைக்கு உட்பட்டு ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தனர். நேற்று மாலை விருதுநகர் தேசபந்து திடலில் இருந்து ஊர்வலமாக செல்ல ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத இயக்கத்தினர் சீருடை அணிந்து வந்திருந்தனர்.
மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சிவலிங்கம், தமிழக-கேரள பொறுப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் போலீசார் சீருடையுடன் ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஊர்வலம் செல்வதற்காக கூடியிருந்த 142 ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரை கைது செய்தனர். இதையொட்டி தேசபந்துதிடலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊட்டியில் 160 பேர் கைது
ஊட்டியில் போலீஸ் அனுமதிக்காத நிலையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத  அமைப்பைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 160 பேரை போலீசார் கைது
காஞ்சிபுரத்தில்
காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வணிகர் வீதியில் இருந்து ஊர்வலம் செல்ல ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தொண்டர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர் கோதண்டன் தலைமையில் மாவட்டத் துணைத்தலைவர் இராம. ஏழுமலை, கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ் உள்பட சுமார் 600 பேர் சீருடை அணிந்து, காவிக் கொடி ஏந்தியபடி திரண்டனர். சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என போலீஸார் மறுத்தனர். ஆனால் போலீஸாரின் அனுமதியை மீறி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தொண்டர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டனர். அப்போது மாணவர்கள், பெண்களை தவிர 300 தொண்டர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
தமிழகம் முழுவதும்
நாமக்கல்லில் சீருடையில் பேரணியாக சென்ற 700க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் பயங்கரவாத தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல கோவை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நெல்லை, , நாகப்பட்டனம், சேலம், நீலகிரி, மார்த்தாண்டம், மற்றும் கடலூர் ஆகிய இடங்களில், சீருடையுடன் பேரணி சென்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக