Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 நவம்பர், 2014

பாஜகவுடன் கைகோர்க்கும் காங்கிரஸ்

ஒரு காலத்தில் மதவாதம் மற்றும் பிரிவினைவாத கட்சியென்று பாஜகவின் மீது புழுதி வாரி இறைத்த காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமது நிலைபாட்டில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது மதசார்பின்மை சக்திகளுக்கு பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது.
பாஜகவின் அகண்ட பாரதம்(இந்துத்துவா)கொள்கைக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் மதசார்பின்மை கட்சிகளின் வாக்குகளை பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செய்ததோ?இல்லையோ?காங்கிரஸ் கச்சிதமாக செய்தது,செய்தும் வருகிறது.
ஊர் இரண்டு பட்டால்…கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது கூடவா 60 ஆண்டுகால காங்கிரஸுக்கு தெரியாமல் போனது?
நிஜமாகவே மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டுமென நினைத்திருக்குமானால்…மகாராஷ்ட்ரம்,ஹரியானாவில் மதசார்பின்மை சக்திகளை ஓரணியில் திரட்டி ஈகோயிசத்தை விட்டு கொடுத்து பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் களம் கண்டிருக்க வேண்டுமே?
நடந்தது என்ன?15ஆண்டு கால நட்பும் 10ஆண்டு கால ஆட்சியின் பங்குதாரருமான தேசியவாத காங்கிரஸை ஒருசில சீட் எண்ணிக்கைக்காக கூட்டணியிலிருந்து வெளியேற்றியது பாஜகவின் வெற்றிக்கு வழி வகுக்குமென்பது உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா?
காங்கிரஸின் மதசார்பின்மைக்கெதிரான துரோகத்தால் இன்று மகாராஷ்ட்ரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி உருவாகியுள்ளது.
காங்கிரஸின் இந்த நம்பிக்கை துரோகத்தை புரிந்து கொண்ட மகாராஷ்ட்ர முஸ்லிம்கள் காங்கிரஸின் கோட்டை என்று சொல்லப்படும் மத்திய அவுரங்காபாத் மற்றும் பைகுலா ஆகிய இரண்டு தொகுதிகளில் அஸாதுத்தீன் உவைசியின் மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து பைகுலாவில் மூன்றாமிடத்திற்கும் அவுரங்காபாத் தொகுதியில் ஆறாமிடத்திற்கும்  காங்கிரஸை ஒதுக்கி விட்டனர்.
அதே தவறை இப்போது நடைபெறவிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் 15மாத கால நட்பு கட்சியான சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை தமது கூட்டணியிலிருந்து வெளியேற்றியுள்ள காங்கிரஸ் அந்த மாநிலத்தில் மதசார்பின்மை சக்திகளின் வாக்குகளை பிரித்து நான்கு முனை போட்டியை ஏற்படுத்தி பாஜகவின் எளிதான வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் வெற்றியை மட்டுமே முன்னிறுத்தும் காங்கிரஸின் அணுகுமுறைக்கு மரியாதை செய்யும் விதத்தில் கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களுக்கு தற்போதைய மோடியின் அரசு உயிரோட்டம் கொடுத்து வருவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
பாஜகவால் குற்றம் சாட்டப்பட்ட ஊழலின் அடையாளமான ஆதார் அட்டை திட்டம் கூட தற்போது மோடி அரசால் அங்கீகரிக்கபடுகிறதென்றால்…அதன் அர்த்தம் என்ன?பாஜகவின் கொள்கையுடன் காங்கிரஸ் நெருங்குகிறது என்று தானே பொருள்படும்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக