Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 29 நவம்பர், 2014

அரச பயங்கரவாதமே அதிபெரியது: வழக்கறிஞர் பேச்சு

சமூக விழிப்புணர்வு கூட்டம் ஒன்று அண்மையில் (நவம்பர் 20) ரியாத்திலுள்ள ரமத் அரங்கில் இந்தியன் சோஷியல்ஃபோரம் (ISF) என்னும் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து வந்திருந்த (NCHRO) என்.சி.ஹெச்.ஆர்.ஓ. என்ற மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் சிறப்புரை நிகழ்த்தினார்.

தீவிரவாதங்களில் அரசு செய்யும் பயங்கரவாதமே அதிபெரியது என்பதை விளக்கியவிதம், ஒவ்வொரு பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்த காலக்கட்டங்களில் நிலவிய அரசியல் சூழல்கள் என்றெல்லாம் இந்தியாவில் நிலவும் தீவிரவாதத் தீமுகத்தின் வரைபடத்தைத் தன்உரையில் படம் வரைந்து பாகம் குறித்தார் என்றால் மிகையில்லை.
குறிப்பாக, அண்மைக்காலமாக குண்டுவெடிப்புகள் வெகுஇயல்பாக தனிமனிதத் தன்னலநோக்கில் நிகழ்த்தப்படுகின்றன என்பதை அண்மையில் ஓரிருவாரங்களுக்கு முன்பு செங்கம் அருகேயுள்ள இறையூர் என்னும் கிராமத்தில் சம்பவித்த குண்டுவெடிப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி உரைத்தார்.
அக்கிராமத்தின் தபால் அலுவலகத்தில் சுமார் 90,000 ரூபாய்வரை கையாடல் செய்த தபால்நிலையஅதிகாரி, தனது ஊழலை மறைக்கும் விதமாக, குண்டுவெடிப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து ஆவணங்களை அழிக்க முற்பட்டதை, ஆனால் விசாரணை வளையத்தில் சிக்கிக்கொண்டதை விவரித்தார்.
அதுபோன்றே, இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரையில் அடிக்கடி வெடித்த ‘பெரியசைஸ் பட்டாசுகளுக்கும், வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிகழ்வுகளிலும் உளவுத்துறையினரே காரணமாக அமைந்திருந்தனர் என்பதை அப்போதைய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் டி.ஜி.பி.க்கு எழுதிய கடிததத்தைச் சுட்டிக் காட்டி விளக்கினார். அதன் பின்னணியில் பரமக்குடியில் உள்ள வங்கிப் பணத்தைக் கொள்ளையிட்ட ஒரு வங்கி மேலாளர், தன் கையாடலை கணக்குத் தணிக்கையாளர்களுக்குத் தெரியாமல் மறைக்க, குண்டுவெடிப்பு நடத்துவதற்கான ஏற்பாடு ஒன்றை காவல்உளவு அதிகாரி ஒருவருடைய ஆதரவில் செய்திருந்ததை, தமது மனிதஉரிமைக்கழகம் பொதுநலவழக்குகளின் வழியாக வெளிக்கொண்டு வந்தது என்பதை விவரித்தார்.
ஆனால், தொடக்கத்தில் மதுரையிலிருந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்களே இதன் காரணமாக, காவல்துறை அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்று சொன்னதுடன், பின்னர் உரிய துப்பு கிடைத்த போது, அதே அதிகாரிகள் அந்த முஸ்லிம் இளைஞர்களை விடுவித்து சரியான கோணத்தில் விசாரணையைச் செலுத்தினர் என்பதையும் சொன்னார். இந்த ‘குண்டு வெடிப்புகள்' தனிமனிதக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டிருந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட உளவுத்துறை அதிகாரிக்கு இருக்கும் உலகளாவிய வல்லரசுத் தொடர்புகள் குறித்தும், அவர் பெற்ற பயிற்சிகள் குறித்தும் விளக்கிய போது, அரசியலின் ஆக்டோபஸ் கரங்கள் எங்கெல்லாம் நுழைந்திருக்கின்றன என்ற திகைப்பு ஏற்பட்டது.
மதுரையில் மட்டுமே ஐ.எஸ்., எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ.யூ., எஸ்.ஐ.சி., எஸ்.ஐ.டி., எஸ்.ஐ.டி., எஸ்.டி., என ஐந்திற்கும் மேற்பட்ட காவல்துறை உளவுப்பிரிவுகள் உள்ளனவென்றும் இவையனைத்தும் முஸ்லிம் சமூகத்தை சுற்றிச் சுற்றி வருவதையே தொழிலாகக் கொண்டு வருவதையும் தெரிவித்தார்.
வழக்கறிஞர் சொன்னதில் கண்கலங்க வைத்ததும், இன்னமும் நீதி நிலைபெறுகிறது என்பதுமான ஒருசெய்தி கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் என்பவரின் செய்தி. இதில் இந்த என்.சி.ஹெச்.ஆர்.ஓ. எனப்படும் தேசிய மனித உரிமைக் கழகத்தின் வெற்றியும் இருக்கிறது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் தற்போதைய தேசிய தலைவராக பேராசிரியர் அ.மார்க்ஸ் செயலாற்றி வருகிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேகத்தின் பேரில் கைதான மசூத் என்னும் அந்த அப்பாவி மனிதர், காவல்துறையின் விசாரணை சித்திரவதையில் இறந்து விடுகிறார். (விசாரணை என்ற பெயரில் பழுக்கக் காய்ச்சிய கம்பியொன்றை ஆசனவாயில் செலுத்தி அவரைக் கொன்றார்களாம் படுபாவிகள்). பின்னர் சடலத்தை என்ன செய்வது என்று விழித்து, சன்னஞ்சன்னமாக வெட்டி கடலில் எறிந்து விட்டார்களாம்).
மனைவியும் இருபிள்ளைகளும் கொண்ட குடும்பம் அடுத்தவேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்தவரை எதிர்பார்த்து நின்ற நிலையிலும், தன்கணவர் கொலைக்கு நீதி பெற்றே தீரவேண்டுமென்ற உறுதிப்பாடுமிக்க அந்தமனைவி ஹசனம்மாள் இந்த என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வாயிலாக நீதிகேட்டுப் போராடி, ஆறுஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியில், வென்று உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று அரசாங்கத்தில் சுமார் எட்டரை இலட்சம்ரூபாய் இழப்பீடாகப் பெற்றுள்ளார். அதற்காக என்.சி.ஹெச்.ஆர்.ஓ.சிறப்பாகப் போராடி, கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட அந்தகாவல்அதிகாரிகள் யாரும் இயல்பான பணிஓய்வு பெற்றுவிடாமல், பணிக்காலத்திலேயே இடைநிறுத்தம் பெறும் வகையில் 2007 முதல் சொந்தசெலவில் வழக்கு நடத்தி வந்தது என்றும், இதற்காக அந்தக்குடும்பத்திற்குக் கிடைத்த இழப்பீட்டுத்தொகையில் ஒருபைசாவும் பெறவில்லை என்றும் சொன்னார்.
குஜராத் படுகொலைகளுக்குப் பின்னர், அதன் எதிரொலி போல, அக்க்ஷர்தம்கோயிலில் பயங்கரவாதிகள் ஆடியவெறியாட்டத்தில் 32 பேர் பலியாயினர் என குற்றம் சுமத்தப்பட்டு அதில் உ.பியைச் சேர்ந்த 6 முஸ்லிம்கள் குற்றவாளிகளாகச் சிக்கவைக்கப்பட்டு அதில் மூவருக்குத் தூக்குத்தண்டனையும் உறுதி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில், மிக எளிய அடிப்படையான கேள்வி ஒன்றின் வாயிலாக அந்த அறுவரின் குற்றமற்றதன்மையை உச்சநீதிமன்றம் உணர்ந்து குற்றத்தளையிலிருந்து விடுவித்தது என்பதை விளக்கினார்.
கடந்த மே 16 அன்று வந்த இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு, தேர்தல்முடிவுகள் என்னும் அலையில் கவனிக்கப்படாமல் போயிற்று என்றார்.
ஃபாஸிசத்தின்கரங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குள்ளும் சிறுபான்மையினர்களுக்குள்ளும் அமைப்புவடிவிலும் (முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்), தொலைக்காட்சி வடிவிலும் (பைகாம் உருது சேனல், பெங்களூர்) ஊடுருவியிருப்பதை அவர் சுட்டியபோது பெருவியப்பும் சுற்றியிருக்கும் சூழ்ச்சிகள் குறித்த சிந்தனையும் ஏற்பட்டது.
“அரசியல் இருக்கட்டும் அதில் எனக்கென்ன” என்று பலரும் இருந்து விடுகிறோம். ஆனால், அரசியல்தான் நமது வாழ்வாதாரத்தை, கல்வியை, வேலைவாய்ப்பை, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணியாக விளங்குகிறது. ஆகவே, யார் ஆண்டால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை விடுத்து அனைவரும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து, தனது உரையை நிறைவு செய்தார்.
கூட்டம் முடிந்த பின்னர் நிகழ்ச்சி குறித்த, பார்வையாளர் கருத்துகள் கோரப்பட்டபோது, ‘காலத்தின் அவசியம்’ என்றேன்.
நன்றி இன்நேரம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக