Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 17 நவம்பர், 2014

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் லெப்பைக்குடிக்காடு விஸ்டம் பள்ளி மாணவிற்கும் பரிசு ...


பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் அரசு, தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சார்பில் 102 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டார். இந்த படைப்புகளை கல்லூரி பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் மதிப்பீடு செய்தனர்.இதில், 6- 8ம் வகுப்புகள் அளவில் மாற்றுவழி ஒளி கடத்தல் படைப்புக்காக தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், நவீன முறையில் தொழிற்சாலையை இயக்குதல் படைப்புக்காக எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும், எபோலா வைரஸ் விழிப்புணர்வு படைப்புக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றன.

9- 10 வகுப்புகள் அளவில் பயனற்ற பொருள்களிலிருந்து பயனுள்ள பொருள்களைத் தயாரித்தல் படைப்புக்காக வி. களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், சமூக நலமும், சுற்றுச்சூழலும் என்ற படைப்புக்காக தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் படைப்புக்காக டி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றன.

10- 12ம் வகுப்பு அளவில் மீன்வளம் பேணுதல் படைப்புக்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஆகாயத் தாமரையைப் பயன்படுத்தி சாயப்பட்டறைக் கழிவுகளைத் தூய்மையாக்குதல் படைப்புக்காக புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், நவீனத் தொழில் நுட்ப படைப்புக்காக தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றன.

அனைத்து வகுப்புகளுக்குமான அறிவியல் நாடகப் போட்டியில், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றன.

கணிதவியல் கருத்தரங்கில், புதிர் கணக்குகள் படைப்புக்காக அயன்பேரையூர் விஸ்டம் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி அப்ரின் ஹுமைராவும், ஆசிரியர்களுக்கான அறிவியல் படைப்பில் துறைமங்கலம் அன்னை ஈவாமேரி கோக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை இயற்பியல் பாட ஆசிரியை சரண்யா ஆகியோரும் சிறப்புப் பரிசுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) சு. பாலு, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் இரா. எலிசபெத், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கோபால், குரும்பலூர் கல்லூரிப் பேராசிரியர்கள் புகழேந்தி, குணமன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ச. கலையரசி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக