Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 நவம்பர், 2014

நமதூருக்கு தேவையான பிரச்சனையா இது ?


வழக்கம் போல் விடிந்த ஞாயிற்று கிழமை  (23-11-2014) காலை பேருந்து நிலையம் அமைதியாகவே காணப்பட்டன. ( நமது நிருபர்களும் அமைதியாகவே காணப்பட்டனர் ஏனெனில் தெரிய வில்லை) இந்த நிலை காலை 11 மணிவரை மட்டும் தான் நீடித்தது.


இதன் விபரங்களை இரண்டு பாகமாக வெளியிடுகின்றார் நமது நிருபர்கள்.

முதல் பாகம் : 

முதல் நாள் (22-11-2014) அன்று நமதூர் பேரூந்து நிலையத்தில் இரண்டு விளம்பர பலகை மட்டுமே காணப்பட்டது. அதாவது தமுமுக மற்றும் மறுமலர்ச்சி தமுமுக வின் டிசம்பர் 6 ஆர்பாட்டத்திற்கான விளம்பரபலகை. அன்று இரவோடு இரவாக மற்றொரு விளம்பர பலகையை தமுமுக வைத்தது. அன்று 23-11-2014 நமதூருக்கு தமுமுக வின் மூத்த தலைவர் ஜனாப். ஜவாஹிருல்லா MLA அவர்கள் வருகையை முன்னிட்டு. பிரச்சனை இங்குதான் ஆரம்பித்தது. இந்த பலகையை மறுமலர்ச்சி தமுமுக வின் விளம்பர பலகையை மறைத்து வைத்தனர்.


இதனை அறிந்து மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் காவல்துறையை தொடர்பு கொண்டு இதற்கு தீர்வு காணும்படி கோரிக்கை வைத்ததாக தெரிகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை நமதூரக்கு காலை 11 மணி அளவில் வந்தனர். உடனடியாக தமுமுக நிர்வாகிகளை அழைத்து விளம்பர பலகையை இடையூறு இல்லாமல் வைக்கும் படி வளியுருத்தியது . முதலில் தமுமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தாலும் முடிவில் உடன்பாடு எற்பட்டு மாற்றி வைத்தனர். இதனால் அரைமணி நேரம் பேரூந்து நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டன.

பாகம் இரண்டு :

மதியம் சுமார் 3 மணி அளவில் TNTJ  நிர்வாகிகள் ஒன்றினைந்து காலையில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி நமதூர் பேரூராட்சி துணை தலைவரிடம் “ நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பொழுது தங்களிடம் முறையாக அனுமதி கோரியிருந்தோம்.” அதன் அடிப்படையில் நீங்கள் இங்கு யாரும் விளம்பர பலகை வைக்க அனுமதி இல்லை என்று கூறியிருந்தீர்கள். ஆகையால் ஜனனாயகத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தின் பேரியக்கமான TNTJ  அதற்கு கட்டுப்பட்டது. முதலில் பேரூராட்சி துணை தலைவரையும் பிறகு காவல்துறையினறையும் TNTJ அனுகினர்.


இது சம்மந்தமாக நமதூர் பேரூராட்சி துணை தலைவர் கொடுத்த வாக்குமூலம் என்ன ?

தற்போது உள்ள விளம்பர பலகை வைக்க அனுமதி கோரி யாரும் என்னிடம் முறையாக அனுமதி கோரவில்லை. நானும் யாருக்கும் அனுமதி வழங்க வில்லை. இந்த நிகழ்வுகளை பற்றி காலையிலேயே எனக்கு தெரியப்படுத்தி இருந்தால் உடனடியாக இந்த விளம்பர பலகையை அந்த இடத்திலிருந்து அப்புர படுத்த உத்தரவு பிரப்பித்திருப்பேன். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் ஊழியர்கள் பணிமுடித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இருந்தாலும் இதை அப்புரப்படுத்த நான் முயற்சி செய்கிறேன்  என்று கூறி சென்றுவிட்டார்.

தொடர்ந்து இதன் சம்மந்தமாக காவல்துறையிடம் பலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்துது. TNTJ  தரப்பிலிருந்து. இதனிடையில் வழக்கம்போல் TNTJ  உறுப்பினர்கள் ஆக்ரோசமான பேச்சுக்களும் , கொந்தளிப்பும் காணப்பட்டது.

முடிவாக ஏற்பட்ட முடிவு

1. .விளம்பர பலகை இருந்த இடம் பஞ்சாயத்து போர்டுக்கு சொந்தமில்லை. மேற்கு மஹல்லாவிற்கு சொந்தமான இடம் என்று உறுதிபடுத்தப்பட்டது.
2. 
   TNTJ  தரப்பிலிருந்து பேரூராட்சி துணை தலைவர் இங்கு வந்து 1 ல் கூறியபடி உறுதிபடுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். ( இதில் ஒரு சில TNTJ உறுப்பினர்கள் போராட்ம் , முற்றுக்கை என்று தங்கள் பாணியில் கர்ஜித்தனர்)

நமதூர் மக்களின் கருத்து 

1.   மேலே கண்ட அனைத்து விசயங்களும் பார்க்கையில் இதை வைத்து பேரூராட்சி துணை தலைவர் ஊரில் உள்ள இயக்கங்கள் மத்தியில் சண்டையை உண்டு பன்னுவதாக கருதுகின்றனர்.

2.   பேச்சு வார்த்தையின் இடையில் இரண்டு தரப்பிலும் அதாவது தமுமுக மற்றும் TNTJ இருவர்களும் ஒரு சில வார்த்தைகள் வந்தன. அது நமதூருக்கு ஆரோக்கிய மான வார்ததையாக இருக்காது.
3.   முதலில் TNTJ தரப்பில் எங்களுக்கு ஏன் அனுமதி தர வில்லை என்று தான் TNTJ தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் பேச்சு வார்த்தை அதிகரிக்க அதிகரிக்க ஒரு சில உறுப்பினர்கள் வார்த்தை விளம்பர பலகையை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக வந்தது. இது ஆரோக்கியமான சமுக சூழலை உறுவாக்காது என்று சகோதர இயக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

4.   ஏனெனில் மீர்ஜான் பாய் , சையது அலி , அலி ராஜா போன்றவர்கள் TNTJ  இயக்கத்திற்கு உள்ள நற்பெயரை கலங்கம் விளைவிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.. ( இதில் மீர்ஜான் பாய் மாவட்ட தலைவரை பார்த்து நீங்கள் பேசாதீங்க என்று பொது இடத்தில் கூறியது தான் சுட்டி காட்டுகின்றோம்.)


5.   ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பார்கள்.  .    

குறிப்பு இன்று கிழக்கு பள்ளி வாசல் ஜூம்மாவில் பேனர் பிரச்சனை பற்றி இமாம் கவலையோடு தெரிவித்தார். 

குறிப்பாக காவல் துறையின் அணுகுமுறை சரியாக இருந்ததாக பொது மக்கள் தொரிவித்தனர்.

நன்றி 

பொது மக்கள் மற்றும் நமது நிருபர்

1 கருத்து:

  1. அடுத்த தலைவர் மீர்ஜான் பாய் என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள் போல...........................

    பதிலளிநீக்கு