Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 நவம்பர், 2014

மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து நேற்று பெரம்பலூரில் SDPI கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வாக்கும் மோடி அரசின் கொள்கைகளை கண்டித்தும், நாட்டை பிளவுபடுத்தும் வகுப்புவாத அரசியலை கண்டித்தும் SDPI கட்சியின் சார்பாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று (04/11/2014) செய்வாய் கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முஹமது ரபீக் தலைமை தாங்கினார். வி.களத்தூர் நகர தலைவர் முஹமது  பாரூக் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர்கள் ஹிதாயதுல்லா, சித்தீக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் முஹமது ரபீக்  தனது உரையில்;

இந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் விதமாக பொருளாதாரக் கொள்கைகளை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி அரசு கடைபிடித்து வருகிறது.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்களை வளர்ப்பதற்கு பதிலாக, பல்வேறு சலுகைகளுடன் அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நாட்டின் வளங்களை தாரை வார்க்கும் செயலை முன்னெடுத்து வருகிறது.
அந்நிய, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் அரசின் ஆதரவு, தனியார் நிறுவனங்களுக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும், தொழிற்சாலைகள் நிறுவி உற்பத்தியைப் பெருக்கவும் முன்வரும் தனிநபர்களுக்குத் தரப்படும்போது மட்டும்தான் உற்பத்திப் பெருக்கமும், அதன் தொடர் விளைவுவாகப் பரவலான வேலைவாய்ப்பு ஏற்படுவதும் சாத்தியமாகும்.

போலியான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி நாட்டின் வளங்களை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
மத்தியில் பாஜக பொறுப்பேற்றது முதல் சமூகங்களுக்கிடையே பிரிவினையை தூண்டும் விதத்தில் அறிக்கைகளை, பேச்சுக்களை அக்கட்சியின் எம்பிக்கள், தலைவர்கள் தொடந்து செய்து வருகின்றனர். போலியான பிரச்சாரங்கள் மூலம் வன்முறைகளையும், சிறுபான்மை விரோத அரசியலையும் பாஜக மேற்க்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிரச்சனைகளை உருவாக்கி நாட்டை பிளவு படுத்தும் செயல் திட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த தர்ணா போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் அயுப் ஹஜ்ரத் அவர்கள் நன்றி கூறினார்.

மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

1 கருத்து: