Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 நவம்பர், 2014

ஜெருசலேத்திலுள்ள அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு!

மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை,கொந்தளிப்பு நிலவியதை அடுத்து , வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான பொலிஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக்கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை அந்த பாலஸ்தீனர்தான் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜெருசலேத்தில் அதிகமான பதற்றம் நிலவுவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக