நமதூர் மருத்துவர்க்கு ஏற்பட்ட நம்மிக்கை மேசடி
குப்பனுக்கும், சுப்பனுக்கும் வரி இல்லை! உனக்கோ வேறு வழி இல்லை! சம்மந்தமில்லாமல், திருச்சியில் உள்ள ஒரு பல் மருத்துவமனை விளம்பரத்துக்கு இப்போது என்ன அவசியம் வந்தது? நம் கேள்வியிலும், செய்தியிலும் அர்த்தம் இல்லாமலில்லை! எல்லாம் நம் ஊர் ஜமாஅத்
தலைவர் மற்றும் பொருப்பாளர்களின், ‘வரி’ விதிப்பை மக்களுக்கு உணர்த்தவும், எச்சரிக்கவும்தான். சரி சம்பவத்துக்கு வருவோம். லப்பைக்குடிகாட்டை சேர்ந்த ஒரு பல் மருத்துவர், தனது கிளினிக்கை திருச்சியில் தொடங்கி உள்ளார். அதற்கான விளம்பரத்தைக்கூட.. நமதூர் ‘கல்லாறு’ பத்திரிக்கையில் விளம்பரம் செய்துள்ளார். இன்னிலையில், அம்மருத்துவர்… நமதூரில் விளம்பரப்பதாகை வைப்பதற்கு விரும்பி, ‘கடை வீதியில் விளம்பரப்பதாகை வைப்பதற்கு யாரிடமேனும் அனுமதி பெற வேண்டுமா?’ என நமதூரை சேர்ந்த, ஒரு தனிநபரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்த தனிநபரும்கூட… ஊர் நிலவரம் அறிந்த, ஒரு நிர்வாக பொருப்பிலிருக்கும் ஒரு முக்கிய புள்ளிதான். ’அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். யார் யாரோ… எதெதற்கோ.. விளம்பரம் வைக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு கிளினிக் விளம்பரம் வைக்க யார் அனுமதியும் கோர அவசியமில்லை. நீங்கள் தாராளமாய் வைக்கலாம்’ என கூறியிருக்கிறார் அந்த நபர். இருப்பினும் அம் மருத்துவர்.. ‘ஏன் அடுத்த ஊரில், தேவையற்ற பிரச்சனை என கருதி, வி.களத்தூர் நாட்டான்மை ஜனாப். லியாக்கத்தலியை சந்தித்து அனுமதி கேட்கவே.. அவரும், ‘சரி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் குறிப்பிடும் இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.’ என சொல்லி, மெயின் ரோடு ‘சாதிக்’ கோழிக்கடைக்கு பக்கத்தில் ஒரு விளம்பரமும், மில்லத்நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலிருக்கும் ‘தண்ணீர் டேங்க்’ அடியில் ஒரு விளம்பரமும் வைக்க அனுமதித்திருக்கிறார். ஆனால், அப்போது எந்த ஒரு நிபந்தனையோ, வரி செலுத்தவோ கூறப்படவில்லை. அதன்படி, மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும், ஒரு விளம்பரம் வீதம் இரண்டு விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பத்து நாள் கழித்து.. விளம்பரத்தை அகற்றும் போது… நாட்டான்மை ‘ஸ்பார்ட் ஆஜர்’. விளம்பரம் வைத்ததிற்காக பள்ளிவாசலுக்கு ரூபாய் ஆயிரம் கொடுத்தே ஆக வேண்டும். என கட்டாயப்படுத்தி வசூல் செய்திருக்கிறார்கள். நொந்துபோய் வேறு வழியின்றி பணத்தை அழுதுவிட்டுபோன மருத்துவர்… ஆலோசனை கேட்ட முன்னவரிடம், “பாய்.. நீங்க சொன்னபடியே, எவனிடமும் அனுமதி கேட்காமல், கடைவீதியின் ஏதோ ஒரு இடத்தில் விளம்பரப்பதாகை வைத்திருந்திருக்கலாம். இப்போது கதை இப்படியாகிவிட்டது’ என்றும்.. ‘அல்லது நான் அனுமதி கேட்டபோதே.. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே விளம்பரம் செய்யலாம், என குறிப்பிட்டிருந்தால்.. நான் விளம்பரம் வைத்திருக்கவே மாட்டேன்’ என சொல்லி புலம்பிச் சென்றதாகவும் நம்மிடம் சொன்னார். ‘சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் அளவுக்கு வசதி படைத்த ஒரு மருத்துவர்… பள்ளிவாசலுக்காக ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்ததில் என்ன குறைந்து போய்விட்டாராம்’ என கேட்க நமக்கு உரிமையில்லை. அதேநேரம், ஊரில் விளம்பரப்பதாகை வைத்ததிற்காக வசூல் செய்ய (ஊராட்சி) ‘பஞ்சாயத்து போர்டு’க்கு வேண்டுமானால் உரிமை உள்ளதே தவிர, வரி வசூல் செய்ய ஜமாஅத் நிவாகத்திற்கு என்ன உரிமை உள்ளது. ஓ.. அடிக்கடி கட்டப்பஞ்சாயத்து நடத்துவதால்.. தங்களை ‘பஞ்சாயத்து போர்டு’ தலைவர் என தவராய் புரிந்திருப்பார்களோ? எது எப்படியோ, எங்கெங்கிருந்தோ வந்து, எவனெவனோ கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம்.. கடைத்தெருவில் விளம்பர பேனர் வைக்கும்போது, நம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் விளம்பரம் வைத்ததற்கு, ஜமாஅத் வரி வசூல் செய்தது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது.
நன்றி தைக்கால்.காம்
intha seithi varuthathirku Oriya ondru thaan.
பதிலளிநீக்குaanal edu pondra sambavangal namaduril(labbaikudikattil) nadaiperathu.
Allah pathukappanaga....
சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் அளவுக்கு வசதி படைத்த ஒரு மருத்துவர்… பள்ளிவாசலுக்காக ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்ததில் என்ன குறைந்து போய்விட்டாராம்’ என கேட்க நமக்கு உரிமையில்லை
பதிலளிநீக்குwhich above mentioned is nonsence. Doctor has to pay or give anything only as per his wish not as per jamath
poda luusu payala
பதிலளிநீக்கு