பெரம்பலூர்
மாவட்டத்தில் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக லெப்பைக்குடிக்காடு ஆரம்ப சுகாதார
நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதற்கான சான்றிதழை கலெக்டரிடம் இருந்து வட்டார
மருத்துவ அலுவலர் சேசு மற்றும் மருத்துவ அலுவலர் கலைமணி மருத்துவமனையின் சார்பாக
பெற்றுக் கொண்டனர். இந்த மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய
24 மணி நேரமும் பிரசவம் பார்ப் பதற்கான பிரசவ அறை மற்றும் சிசு கண்காணிப்பு அறை
மற்றும் 30 படுக்கை வசதி கொண்ட பேறுகாலத்தின் கவனிப்பு அறை மற்றும் ஸ்கேன் வசதி
போன்ற வசதிகளுடன் சிறந்த
உள் கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனையாக விளங்குகிறது.
இதனால் மாத்த்திற்கு 15 க்கும் குறையாமல் சுகப்பிரசவம் அனுபவம் வாய்ந்த
செவிலியர்களால் பார்க்கப்படுகிறது. இந்த காரணத்தால் இந்த மருத்துவமனைக்கு சிறந்த
மருத்துவ மனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நமது இணையத்தளத்தின் மூலமாகவும் நமதூர் மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
EVEN SMALL SNEEZING TREATMENT IN TRICHY , TOTALLY WE FORGOT THE FACILITY PROVIDED BY OUR GOVERNMENT . OUR NEXT GENERATION NOT KNOW ABOUT GOVERNMENT HOSPITAL , WE ALSO TOTALLY FORGOT SUCH A GOOD HOSPITAL , THIS LOSS ONLY FOR LBK
பதிலளிநீக்குநமதூர் மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து நல இதயங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த பணி.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு