Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 7 ஜனவரி, 2014

தமுமுக சார்பாக முஸாபர் நகர் மக்களுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது!



முஸாபர் நகர் மக்களுக்காக நீதி வசூல் செய்யப்படுகிறது.. கோவை மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... குஜராத் மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கும்
வாரிக்கொடுத்த சொந்தங்களே... இப்போது முஸாபர் நகர் மக்களுக்காக வாரி வாரி வழங்கிட தயாராவீர்! வீதி வீதியாகச் செல்வோம்... வீடு வீடாக ஏறி இறங்குவோம்.. கண்ணீரில் மிதக்கும் நம் மக்களுக்கு, கைக்குட்டைகளாய் மாறி அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்! எங்களுக்கு கதியில்லையே... என அம்மக்களை கதறி அழவிடாது, உங்கள் சகோதர சகோதரி நாங்கள் இருக்கிறோம் என உரத்து முழங்கி தமிழகத்திலிருந்து நிதிகளை சேகரித்து முஸாபர் முகாம்களுக்குச் செல்ல தயாராகுவோம்....லப்பைக்குடிக்காடு தமுமுக

மின்னஞ்சல் மூலமாக
லப்பைக்குடிக்காடு தமுமுக

1 கருத்து:

  1. Dear LBK TMMK,

    Please only idhu ponra sevaigal mattum seiyungal..!

    Adhai vittu vittu oru silarin suya labatthirkaga, padhavikkaga young generationai vazhi kedukkatheergal..

    பதிலளிநீக்கு