Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 ஜனவரி, 2014

வரவேற்கத்தக்கது....

தமிழகத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் : SDPI கோரிக்கை....!! 

தமிழகத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று SDPI கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு...

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 

சுதந்திரத்திற்கு பின்னர் இட ஒதுக்கீடு முறை அகற்றப்பட்டதன் காரணமாக இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதனை பல்வேறு ஆணையங்களும் புள்ளி விபரங்களுடன் தெரிவிதுள்ளன.

இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளின் தொடர் முயற்சியால், போராட்டங்களால் கடந்த 2007 ல் தமிழகத்தில் 3.5 சதவிகிதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் அவர்களின் வாழ்வாதார நிலையை கணக்கிடும் பொழுது 3.5% இட ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானதாகும். 

எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழகத்தில் கடந்த மாதங்களில் பத்து மாவட்டங்களில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மாநாடுகளை நடத்தியது. தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. மேலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றன. 

தமிழக முதல்வர் 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கிடுவோம் என உறுதியளித்ததின் பேரில் இஸ்லாமிய மக்கள் அ.தி.மு.க விற்கு பெருவாரியாக வாக்களித்தனர் என்பதையும் கவனத்தில் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் இக்கோரிக்கயை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நியாயமான இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நடத்தப்படும் அனைத்து போராட்டங்களையும் யார் நடத்தினாலும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது. 

தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான இட ஒதுக்கீடு என கருதாமல் சமூக நீதியை தமிழகத்தில் நிலைநாட்டிட காலதாமதமின்றி தற்போது முஸ்லிம்களுக்கு வழங்பட்டு வரும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : நெல்லை முகம்மது லெப்பை
முக நூலிலிருந்து

1 கருத்து:

  1. எஸ்.டி.பி.ஐ கூறியது இஸ்லாமியர்கள் மீது உள்ளபற்று பாராட்டுக்கள்.இதே TNTJ கட்ச்சிகாரர்கள் கூறுவார்களா?கூரமாட்டார்கள் ஏன் என்றாள் நான் என்கின்ற அகம்பாவம் குடிகொண்டு இறுக்கிரது.

    பதிலளிநீக்கு