Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 17 ஜனவரி, 2014

அலட்சியப் படுத்தப்படும் அண்ணலாரின் நடைமுறைகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் வாழ்க்கைதான் உலக மக்கள் அனைவரும் பின் பற்றி வாழ்வதற்கு சரியானதும் தகுதியனதுமாகும் இன்று மனிதர்கள் பேஷன் என்ற அடிப்படையில் கண்ட கண்ட செயல்களில் ஈடுபட்டுக் கொடிருக்கின்றர்கள் அதனால் அவர்களுக்கு நோயும் ,கண்ணியக்குறைவும் ஏற்படுகின்றது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந் நடைமுறைகள் மனிதனுக்கு அணைத்து விதத்திலும் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் கொடுக்கின்றது ஏனெனில் அல்லாஹ் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் அருள் கொடையாக அனுப்பியுள்ளான் .

சுன்னத்

இந்தச்சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ”வழி” என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவதுநபி அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ”சுன்னத்” என்றுசொல்லப்படுகிறது

“யார் எனது வழி முறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை.”                         அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : முஸ்லிம்

 وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ

لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ ۚ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ

அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள்பரிகசிக்கின்றீர்கள்…, நீங்கள் விசுவாசம் கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்தே விட்டீர்கள்.” (9:65,66)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.    அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) அவர்கள் நூல் : அபூதாவுத் (3512) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்)உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்)நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம்அவர்கள் தங்கள் இறைத்தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன்கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான்தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச்செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்தஅளவிற்குச் செய்யுங்கள்.                அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (7288)

இந்த ஹதீஸ்கள் மூலம் நபி(ஸல்)அவர்களின் சுன்னத்களை பின்பற்றுவதின் முக்கியத்வம் விளக்கப்பட்டுள்ளது அதிலதான் அல்லாஹ்வின் நேசமமும் உள்ளது

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين

                                                                                                                                       அல்குர்ஆன் 3: 31,32

சுன்னத்கள்

ஸலாம் சொல்லுதல்

இன்று ஒரு நபரை சந்திக்கும் போது சலாம் சொல்லும் பழக்க வழக்கம் குறைந்து விட்டது

لا تدخلون الجنة حتى تؤمنوا ، ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم : أفشوا السلام بينكم  

ஈமான் கொள்ளாதவரை உங்களில் ஒருவர் சுவனம் செல்ல முடியாது நீங்கள் ஒருவருக்கொருவர் பிரியம் கொள்ளாதவரை மூமீனாக முடியாது உங்களுக்கு மத்தியில் நேசத்தை அதிகரிக்கும் ஒன்றை சொல்லித் தரட்டுமா?அதுதான் உங்களுக்கு மத்தியில் சாலாமை பாரப்பிக்கொல்லுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

، وتقرأ السلام على من عرفت ومن لم تعرف

உணவு :

பிஸ்மி சொல்லி சாப்பிடுதல்

إذا أكل أحدكم فليذكر اسم الله ، فإن نسي أن يذكر اسم الله في أوله فليقل بسم الله أوله

உங்களில் ஒருவர் சாபிட்டால் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறட்டும் அதன் ஆரம்பத்திலே அல்லாஹ்வின் பெயர் கூற மறந்துவிட்டால் அவர் பிஸ்மில்லாஹி அவ்வலஹுவ ஆகிறகு என்று கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                      ஆயிஷா(ரலி) திர்மிதி

வலது புறம்

سَمَّ الله وكُلْ بيمينك وكُلْ مما يليك

பிஸ்மிசொல்வீராக வலது கையில் சாப்பிடுவீராக உமக்கு அருகில் சாப்பிடுவீராக

மூன்று விரலால்சாபிட்டு விரலை சூப்புவது

رأيت رسول الله – صلى الله عليه وسلم-يأكل بثلاث أصابع فإن فرغ لعقها

நான் நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதை பார்த்தேன் மூன்று விரல்களால் சாபிடுவார்கள் முடிந்ததும் விரலை சூப்புவார்கள்

தண்ணீர் குடித்தல் :

வலது புறம் :

إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه ، فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله

நீங்கள் சாபிட்டால் வலது கையால் சாப்பிடுங்கள் குடித்தால் வலது கரத்தால் குடியுங்கள் ஏனெனில் ஷைத்தான் இடது கையால் சாப்பிடுவான் குடிப்பான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

நின்று குடிக்க வேண்டாம்

لا يشربن أحدكم قائماًقال - صلى الله عليه وسلم-

ஆடை

لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطراً 

தன் வேட்டியை தரையில் இழுத்து நடப்பவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்கமாட்டன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் 

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم: ... وذكر منهم: المسبل رواه مسلم 

மூன்று நபர்களிடம் அல்லாஹ் பார்க்க மாட்டான் பேசமாட்டான் அவர்களை தூய்மை படுத்தமாட்டன் அவர்களுக்கு கடும் வேதனை உண்டு ........அதில் ஒருவன் வேட்டியை தரையில் படுமாறு பூமோயில் தொங்க விட்டுச் செல்பவன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

ما أسفل من الكعبين من الإزار ففي النار ) رواه البخاري.

”இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின்முடிகளைக் களைவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள்முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்றுமுகமதுநபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5891 

இது போன்ற அதிகமான சுன்ன்த்கள் உண்டு அதை நமது வாழ்வில் அனைவரும் ஒருமாதிரியாக பார்ப்பர்கள் என்று என்று வெட்கம் இல்லாமல் சொல்லுகின்றோம் ஆனால் இதில்தான் மருத்துவமும் கண்ணியமும் உள்ளது 

சுன்னத்தில் மருத்துவம்

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக்குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறையதண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும்.அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவுஜீரணிக்கும்.

அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்

*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச்சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக்குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள்தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில்அடுத்தடுத்து உள்ளன                                                                                                                   நன்றி தமிழ் .நெட்

 உலகெங்கும்மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாராபாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்தஎச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள்தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள்குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நோய் பெண்களில்இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்றுஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும். இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்பேவேயிலும்அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம்ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்றுஅந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.

பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வந்த செய்தி

 சஹாபாக்கள்

நபி(ஸல்)அவர்களின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றியவர்கள் சஹாபாக்கள் பெரிய பெரிய மன்னர்களுக்கு முன்னாலும் சரி எனது சுன்னத் எங்கள் நபிகள் காட்டித்தந்த சுன்ன்த்தான் என்று முழங்கிய சஹாபாக்கள் அதே போல் நபியவர்கள் இந்த இடத்தில் குனிந்து சென்றார்கள் அதனால் நானும் குனிந்து செல்கின்றேன் என்ற தோழர்களும் ஒரு வினடிப்பொழுது கூட நபியவர்களின் சுன்னத்தை விட்டுவிடாத தோழர்களும் தான் சஹாபாக்கள்

அதே போன்று நாமும் நபி அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அதற்கு நாம் நபியவர்களை நேசிக்க வேண்டும் நாம் நபியவர்களை நேசிப்பது உண்மையெனில் அதை நமது நடைமுறையில் காட்டவேண்டும் நாம் யாரை நேசிக்கின்றோமோ அவர்களுடனேயே எழுப்பபடுவோம் அல்லாஹ் நம்மை நபியவர்களின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றி நடக்க உதவி செய்வானாக ஆமின்!

2 கருத்துகள்:

  1. சில விஷயம் விஞ்ஞானி சொன்னதா சொன்னிங்க யார் அந்த விஞ்ஞானி? எப்ப சொன்னாரு? எந்த நாட்டு விஞ்ஞானி? எந்த பதிப்புல இருக்கு? இதை எல்லாம் சொன்னா ரொம்ப நல்லாயிருக்கும்

    பதிலளிநீக்கு