Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்- திருச்சியில் பரபரப்பு கிளப்பிய போஸ்டர்கள்

திருச்சி: சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பினரை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என  போஸ்டர்கள்  ஒட்டப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரி  இன்று சிறைநிரப்பும் போராட்டம் நடத்திவரும் தவ்ஹீத் ஜமாத்  அமைப்பினரை கைது செய்வதுடன் அவர்களை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என திருச்சி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு நிலவுகிறது அங்கு.

முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி சிறைநிரப்பும் போராட்டத்தை அறிவித்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு அறிவித்தபடி இன்று  சென்னை, கோவை, நெல்லை, திருச்சி   இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இதில்  லட்சகணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டு  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள்  எழுப்பினர்.

இதனிடையே முஸ்லீகளின் சிறைநிரப்பும் போராட்டத்தினை கண்டித்து  அகில பாரத இந்து மகா சபா, அகிலபாரத அனுமன்சேனா என்ற இந்து அமைப்புகள் திருச்சி பகுதிகளில் போஸ்டர்களை  ஒட்டியிருந்தன.  ”தமிழக  அரசே! தமிழக அரசே! கைது செய் கைது செய்! இந்து விவசாயிகள் வாங்கிய கடனை  அடைக்க  கட்ட  இயலவில்லை என அரசுக்கு விளக்க அமைதியான முறையில் போராடியதை    ஒடுக்கும் விதமாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையே.. தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு கெட வேண்டும் என  எண்ணி இன்று  போராட்டம் அறிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள் மீதும் கலந்துகொள்ளும் முஸ்லீகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என எழுதப்பட்ட இந்த போஸ்டர்கள் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  



இதன் எதிரொலியாக அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர் திருச்சி மாநகர காவல்துறை.

மின்னஞ்சல் மூலமாக
சேக் ராஷீத்

7 கருத்துகள்:

  1. ethu poontravarkal namathu naattil neraiyaper ollanar.ethanaalthaan penkalai poraattathel payanpaduthuvathu aapathu enkiraarkal..

    பதிலளிநீக்கு
  2. சம்சுதீன் காசுமியை கேவலமாக திட்டீய தவ்ஹீத் ஜமாத்த்தின் வாய் இப்ப எங்க போச்சு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் முகத்தில் தான் உள்ளது.

      நீக்கு
    2. நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.

      இயக்கவாதிகளை விட
      நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
      நிறைய சந்தர்ப்பங்களில்
      பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
      இரு சாராருக்கு மத்தியில் ...
      சிண்டு முடிச்சு விடுவதும்....
      இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
      இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
      இல்லாமல் இருப்பதே நல்லது ....!

      நீக்கு
  3. போராட்டம் நடத்தியதே கைது செய்யச் சொல்லி ,,அங்கு வந்த முஸ்லிம்களின் எழுச்சியை பார்த்து விட்டு காவல் துறையினர் போராட்டத்திற்கு வந்த வாகனங்களுக்கு இடத்தை ஒதுக்கவே எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது, இதில் உங்கள் அனைவரையும் சிறையிலோ மண்டபத்திலோ அடைப்பது என்பது எங்களால் இயலாது என கூறினர்....

    பதிலளிநீக்கு
  4. இவர்களுக்கு பதில் தராமல்.....

    எனக்கு மைக்கு கிடைத்துவிட்டது என்று பேசிய சையது இப்ராஹிம் எங்கே போனார்....

    பதிலளிநீக்கு
  5. They need to answer for shandudeen qasimi.
    its been proved form hadith, its not allowed to go out for female without any proper guidance......

    பதிலளிநீக்கு