உ.பி மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, உடைகள், உணவுடன் கையெழுத்துக்கலை (calligraphy) பயிற்சியும் அளிக்கப்படுகிறது.ஷாபூர் ஜதில் ஜோகியா கேரா முகாமில் அப்துல் வாஜித் காஸ்மி என்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்துவதற்காக உருதுகையெழுத்துக் கலையை கற்றுக்கொண்டுக்கிறார். இவர் விக்ரானா கிராமத்தில் உருது ஆசிரியர் ஆவார்.முகாமின் ஒரு பகுதியில் பாறைகளுக்கு அப்பால் காஸ்மியின்
பயிற்சி களம் அமைந்துள்ளது.முனை கூர்மையாக்கப்பட்ட குச்சிகளுடனும், மை நிறைத்த குப்பிகளுடனும் உருது எழுத்துக்களின் அழகில் மூழ்கியிருக்கும் குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்து ஆசுவாசம் அடைகின்றனர்என்று காஸ்மி கூறுகிறார்.குச்சிகளால் மைக்குப்பிகளில் மீண்டும் மீண்டும் முக்கி எழுதுவதுரசிக்கத்தக்கதாக உள்ளது என்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட யூசுஃப் என்றசிறுவன் கூறுகிறான்.வீட்டிலிருக்கும்போது பள்ளிக்கூடம்செல்வதுண்டு.ஆனால், இப்போதுதான் முதன் முறையாக கற்றுக்கொள்கிறேன் என்றுயூசுஃப் கூறுகிறார்.வீடுகள் தீயில் பற்றி எரிவதையும், நேசத்திற்குரிய குடும்பத்தினர்கண்முன்னால் எதிரிகளால் படுகொலைச் செய்யப்பட்டதையும் நேரில் கண்டகுழந்தைகள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும்விடுபடவில்லை.குழந்தைகளில் பலரும் இப்போதும் தூக்கத்தில் அலறுகிறார்கள்என்று காஸ்மி கூறுகிறார்.இவ்வகுப்புகளில் கிடைத்த ஆறுதலின் காரணமாககுழந்தைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதாக காஸ்மி தெரிவித்தார்.
முதல் நாள் ஒரு வகுப்பு மட்டுமே நடந்தது.குழந்தைகள் அதிகரித்ததால் ஷிஃப்டுகளாக மாற்றி காலை முதல் இரவு வரை வகுப்புகள் நடந்துவருகிறது.உருது கையெழுத்துக் கலையுடன் உருது இலக்கியம், இலக்கணம்,குர்ஆன் ஓதவும் காஸ்மி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக