நினைவுச்சின்னமாக மாறிய நமதூர் தபால் பெட்டி!
நான் அந்த முந்தைய சமுதாயத்தினரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் திர்ஹங்களைவிட, தீனார்களைவிட நேரத்திற்கு அதிக மதிப்பும், அதிக முக்கியத்துவமும் கொடுத்தனர். அதன் விசயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தனர்.
ஹஸன் அல் பஸரீ (ரஹ்)
நாட்கள் வெகு தூரம் கடந்து செல்லவில்லை. ஆனால் நினைவுளும் நிம்மதியான நிகழ்வுகளும் நம்மை வெகு தூரம் அழைத்து செல்வதைபோல் தோன்றுகிறது.
ஆம் நம் குடும்பத்தார்கள் துபையில் வந்திரங்கிய காலமுதல் தொன்று
தொட்டு அவர்களுக்கும் நமக்கு ஒர் இரத்த ஓட்ட உறவு என்றால் அது தாபல் தான். இன்று எத்தனை குழந்தைகளுக்கு தெரியும் இதைப்பற்றி?
அப்பொழுது இருந்த நாகரீகமும் நமதூர் பண்பாடும் ஒற்றுமையும் இன்று இந்த தொழில் நுட்பம் வந்திரங்கி குறிகிய நாட்களில் நம்மை நமக்குள்ளேயே வேற்றுமை படுத்தி காட்டுகிறது. உண்மையை செல்லப்போனால் நமது உறவினர்களையே நமக்கு தெரியாத அளவு நாம் தல்லப்பட்டிருக்கிறோம்.
கடிதம் எழுதிய காலத்தில் நமதூர் காரர்கள் மத்தியில் அன்பு, மரியாதை, கண்ணியம், கருத்தொற்றுமை, மிகைந்தோங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் இங்கிருந்து வெளிநாடு செல்லும் கடிதமும் அங்கிருந்து நாமதூருக்கு வரும் கடிதமும் அவர் அவர்களுக்கு கிடைக்கும் பொழுது அவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை! குறிப்பாக திருமணமான கணவன் மணைவி இடையே இந்த பறிமாற்றம் என்றால் அதை சொல்லவே வேண்டாம்! ஆனால் இன்று அணைவரும் கூறும் ஒரே வார்த்தை நேரமில்லை! நேரடியாக பார்த்து பேசும் அளவிற்கு உடனடியாக தகவல்களை பறிமாரும் இந்த தருனத்தில் நேரமில்லை என்பது நமக்கே வேடிக்கையாக உள்ளதள்ளவா?
தீர்வு
அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவக்கிறார்கள்.
“ இறுதி தீர்ப்பு நாளில் நான்கு விஷயங்களுக்கு பதில் சொல்லாதவரை ஆதமின் மகனின் கால்கள் நகராது. அவன் தனது வாழ்நாளை எவ்வாறு செலவிட்டான், இளமையை எவ்வாறு செலவிட்டான், எப்படி பொருள் சம்பாதித்தான் - எப்படி அதனைச் செலவிட்டான், தன் அறிவை எப்படி செலவிட்டான் ஆகியவைகளே அந்நான்கு கேள்விகள்”.
(திர்மிதீ)
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக