நூலின் பெயர் : “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு”
ஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது
வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம்
பக்கங்கள்: 72
விலை: 45/-
இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பதுதான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாததே.
இது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற தொடர் கலவரங்கள், இனப்படுகொலைகள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதற்கு விதிவிலக்காக, 1990களின் காலக்கட்டத்திற்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும், அரசியல் தளத்தில் போதிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், தற்பொழுது அதற்கான முயற்சிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனுடைய வெளிப்பாடுதான் விஸ்வரூபம் படத்திற்கெதிரான போராட்டம், நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி எடுத்த அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம். இந்தப் போராட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது, தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியையும், வழிநடத்திச் செல்வதில் போதிய தலைவர்கள் உருவாகி விட்டார்கள் என்பதையும் அறிவிக்கும் விதமாகத்தான் இருந்தது.
தற்போது, அதனைப் பற்றி விளக்கும் விதமாக வெளிவந்துள்ளது “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பேச்சாளருமான எஸ்.எம். ரஃபீக் அஹமது அவர்கள் எழுதியுள்ளார்.
இவரின் பேச்சு மக்களின் புருவங்களை உயர்த்தும் அளவுக்கு அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. இலக்கியச்சோலை வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் எதிர்கால தமிழக அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நன்றி தூது ஆன்லைன்
simply waste the time, some one get money (leaders)
பதிலளிநீக்கு