மேலே உள்ள இந்த கருத்து நமது தளத்திள் சண்டையில் முடிந்த பேரூராட்சி கூட்டம் என்ற செய்தியில் வந்த கருத்தாகும். நாங்கள் யாருக்காகவும் வழிந்து பேசவே ஆதரகாவே இந்த தளம் செயல் படாது. எங்களுடைய மன வலியை கீழே வெளியிடுகிறேம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
நாம் கிழக்கு சுன்னத்துவல் ஜமாத், மேற்கு சுன்னத்துவல் ஜமாத் அல்லது தவ்ஹீத் வாதிகள் இது போன்று ஒருவர் மற்ற வரை வெறுப்பதென்பது நாம் பிறந்த போது நம்மோடு ஒட்டிப் பிறந்த குணமல்ல. மாறாக வாழ்க்கை ஓட்டத்தில் மனிதர்கள்தான் வெறுக்ககற்றுக் கொண்டார்கள். வெறுப்பை மக்களால் கற்றுக்கொள்ள முடியும் எனும்போது அவர்களுக்கு விருப்பத்தை, அன்பை கற்றுக் கொடுப்பது எளிதானதே. ஏனெனில் அன்பு என்பது இயற்கையாக மனிதனின் இதயத்தில் இருந்து மகிழ்ந்து வருவதாகும். இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து வாழ்வதையே நாங்கள் விரும்புகின்றேம். அப்படிப்பட்ட வாழ்க்கைமுறை நடைமுறைப்படுத்தப் படுவதற்காகவே இந்த தளம் செயல் படும் இன்ஷா அல்லாஹ். அதற்கு விலையாக (ஈமானை தவிர) எதையும் இலக்க தயார். அது எம் உயிராக இருந்தாலும் சரியே. அது ஒரு முறையல்ல பல முறை இறுந்தாலும் எம் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே.
“இறைவா ! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.” (புகாரீ 2893)
நமது ஆசிரியர் குழு
நமதூர் செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக