Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஜனவரி, 2014

தவ்ஹீத் (இஸ்லாம்) ஏற்படுத்திய மாற்றம்....

ஹன்ஸா (ரலி) என்ற பெண்ணைப் போன்று இன்றைய முஸ்லிம் பெண்ணும் இருக்க வேண்டும். ஹன்ஸா இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் நடந்த ஒரு சம்பவத்தில் அவரது சகோதரர் சஹ்ர் இறந்து விட்டார். அப்போது, ஹன்ஸா ஒப்பாரி வைத்து அழுதது உலகத்தையே உருக்குவதாக அமைந்திருந்தது. அவரது சகோதரர் சஹ்ருக்காக அவர் பாடிய இரங்கற் பாக்கள் அரபு இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்றவை.


ஆனால், ஹன்ஸா இஸ்லாத்தைத் தழுவி இறைநம்பிக்கையின் ஒளியில் இரண்டறக் கலந்து விட்ட போது இஸ்லாம் அவரது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவரை ஒரு புதிய படைப்பாகவே மாற்றிவிட்டது. ஒரு புதிய பெண்ணாக அவர் உருவாகிவிட்டார். அவரது அறியாமைக்கால (ஜாஹிலிய்யா) இலட்சியங்களை விட வித்தியாசமான இலட்சியங்கள் அவரிடம் குடிகொண்டன. வேறு ஒரு கோணத்திலிரந்து அவர் சிந்திக்கலானார். 

ஹன்ஸா (ரலி) வின் புதல்வர்கள் நான்கு பேரும் உமர் (ரலி) காலத்தில் நிகழ்ந்த காதிஸிய்யா போரில் கலந்து கொண்டு போராடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை அவர்களுக்குத் தேவையான உபதேசங்களை ஙன்ஸா (ரலி) வழங்கியதுடன் போர்க்களத்தில் பின்வாங்கிவிடாமல் முன்னே சென்று போராடும்படியும், தளர்ந்து விடாமல் உறுதியாக இருக்கும்படியும், உயிர் தியாகம்செய்ய வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கும்படியும் உபதேசம் செய்தார்கள்.

ஆம். நால்வருமே அல்லாஹ்வின் பாதையில் உயிர்தியாகம் செய்துவிட்டார்கள். இப்போது அவர்களது வீரமரணம் பற்றிய செய்தி தாய்க்கு எட்டுகிறது. அவர் என்ன செய்தார்? உடம்பெல்லாம் அடித்துக் கொண்டு தன் ஆடைகளை கிழித்துக் கொண்டாரா? அறியாமை காலத்தில் நடந்து கொண்டது போல் நடந்து கொண்டாரா? அதிர்ந்து தளர்ந்து போனாரா? நான்கு பேரும் மரணமடைந்து விட்டார்களே! அவர் ஓர் அன்னை என்பது உண்மைதான். ஆனால், தாய்மையின் அன்பை விட அவரது இறைநம்பிக்கை (ஈமான்) உறுதியாக இருந்தது.

ஆம் செய்தியை கேள்விப்பட்தும் அவர் “ அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் இறைவனுக்கே). அல்லாஹ் தனது பாதையில் எனது பிள்ளைகள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பளித்து என்னைக் கௌரவப்படுத்தினான். எனக்காக மறுமையில் பரிந்து ஆபசக்கூடியவர்களாக அவர்களை ஆக்கிவிட்டான்” என்று கூறினார். இறைநம்பிக்கை கொண்ட ஒரு தாயின் உன்னதக் கூற்று இது.

விடியல் வெள்ளி செப்டம்பர் 2013

மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் .ப்ரண்ட 
லெப்பைக்குடிக்காடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக