Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஜனவரி, 2014

வக்ஃபு பற்றி கருத்து கூறியதினால் வெளியேற்றப்பட்டார்.

 டெல்லி: தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து கேள்வி கேட்ட நபர் விழா அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
டெல்லியில் தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழா பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், வக்ஃபு வாரிய சொத்துகளை சிறுபான்மை சமுதாயத்தினர் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என பேசினார். பிரதமர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எழுந்து நின்ற ஒருவர், பிரதமரை நோக்கி கூச்சலிட்டார். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அந்த நபரை பாதுகாவலர்கள் அரங்கில் இருந்து அப்புறப்படுத்தினர். பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்ட அந்த பெயர் ஃபஹிம் பெய்க், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாபராபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் கூறப்படுகிறது. செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுபான்மையினர் நலத் திட்டங்களை செயல்படுத்தக் கோரி, இதுவரை பிரதமருக்கு 150-க்கும் மேற்பட்ட கடிதங்களை தான் அனுப்பியுள்ளதாக கூறினார். ஆனால், அவற்றுக்கான எந்த பதிலும் தனக்கு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் கடிதம் கிடைக்கப் பெற்றதற்கான அத்தாட்சி கூட அனுப்பப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வெளியீடு : tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக