ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
சனி, 26 ஏப்ரல், 2014
தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க புதிய விதிமுறை!

கடந்த 1996ம் ஆண்டு, திமுக ஆட்சியில், ரூ.15 ஆயிரமும், 2006ம் ஆண்டு, ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போதைய ஆட்சியில், இத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு, ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, முன்பு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
வியாழன், 24 ஏப்ரல், 2014
மதுரையை மிரட்டும் வெடிகுண்டுவழக்குகளில் அவிழ்கிறது மர்மமுடிச்சு!
மதுரையை மிரட்டும் வெடிகுண்டுவழக்குகளில் அவிழ்கிறது மர்மமுடிச்சு!
வெடிகுண்டு வைக்க உளவுத்துறை போலிஸுக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணம் கோர்ட்டில் தாக்கல்!

அப்போது உளவுத்துறைக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை பல பத்திரிக்கைகள் வெளியிட்டன. அதில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு வெடிகுண்டு வைக்க பணம் வழங்கப்பட்ட செய்தியும், பல கொலை வழக்கில் தில்லுமுல்லு செய்ய பணம் வழங்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது.
வாக்குப்பதிவை வெப்சைட்டில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு
தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 684 வாக்கு சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 22 ஏப்ரல், 2014
திங்கள், 21 ஏப்ரல், 2014
எப்படி இருந்த பர்க்கத் ரூம் இப்படி ஆனது ?
யா அல்லாஹ் நீ தான் எங்களை காப்பாற்றுவாயாக...
நமதூர் மக்கள் அனைவரும் தங்கள் தாய், தந்தை,மனைவி, மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் விட்டு விட்டு பொலப்புக்காக வெறும் பணத்துக்காக துபாய் சென்று அவர்கள் வாழும் துன்பத்தை பார்த்தால் எப்படி சொல்வது என்று சொல்ல இயலாது...நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்....
8 ( 0 ) முஸ்லிம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு!!
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக 8 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014
10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்:மாணவர்களின் விவரங்கள் முன்கூட்டியே கணினியில் பதிவு
பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன் லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக் கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்காக முன்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர்.
மாவட்ட தலைமையகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவ லகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்வதால் மாணவர் களுக்கு அலைச்சல் ஏற்பட்டதுடன் பல்வேறு சிரமங்களையும் அவர் கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
சனி, 19 ஏப்ரல், 2014
வெள்ளி, 18 ஏப்ரல், 2014
வியாழன், 17 ஏப்ரல், 2014
புதன், 16 ஏப்ரல், 2014
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
உலகின் மிகச் சிறந்த இடங்களில் துபாய் முதலிடம்!
துபாய்: உலகில் காணவேண்டிய மிகச் சிறந்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாய் முதலிடம் பிடித்துள்ளது.
சுற்றுலா செல்பவர்களுக்காக பயண ஏற்பாடுகளை மேற் கொள்ளும் உலகின் மிகப் பெரிய இணையதளமான “ட்ரிப் அட்வைசர்”, 2014-ஆம் ஆண்டுக்கான ‘ட்ராவலர்ஸ் சாய்ஸ்’ விருதுக்காக உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோல்கள் கொண்டு பட்டியலிட்டது.அதில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.மக்கள் கண்டுகளிக்க துபாயில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
திங்கள், 14 ஏப்ரல், 2014
11 விதமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக் காளர்கள் கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 விதமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக்காண்பித்து வாக்களிக்கலாம்என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரி வித்துள்ளார்.
11 ஆவணங்கள்
இதுகுறித்து அவர் தெரி வித்துள்ளதாவது:-
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப் பதற்கான வாக்காளர் புகைப் பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.
ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
இனி நாம் நமதூர் பிரச்சனைகளை எப்படி கையாள போகிறோம்....
ரகசிய கேமர கூறும் உண்மைகள்...
உலகம் முழுவதும்
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு Hide and Seek ஒளிந்து பிடித்து விளையாடுவது.
இவ்விளையாட்டினை விளையாடும் குழந்தைகள் ஒளிந்திருப்பவர்களை கண்டு பிடிக்க இயலாத சமயத்திலோ
அங்கிருக்கும் பெரியவர்களின் உதவியை நாடும்பொழுது அப்பெரியவர்களின் தவறான மாற்று இடங்களை
கைகாட்டி விடுவதன் மூலம் விளையாட்டு இன்னும் விறுவிறுப்பு அடையும்.
நமது படிப்பு நமது முன்னேற்றமும்...
தமிழக முஸ்லிம்களின் வாழ்வு முன்னேற்றம் அடையும்...! இன்ஷா அல்லாஹ் .....!
இஸ்லாமிய வங்கி (Islamic Bank)அதன் வளர்ச்சி அதில் குவிந்து வரும் வேலை வாய்புகள் இஸ்லாமிய வங்கியியல் துறைக்கு நாம் ஆற்ற வேண்டிய அறிவு மற்றும் ஆய்வு ரீதியான பங்களிப்புகள்..... இவை குறித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டு காலமாக முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளோம்.
ஹெப்பாடிடிஸ்-சி வகை காமாலை நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!
ஹெப்பாடிடிஸ்-சி வகைகாமாலை நோய்க்கு 12 வாரத்திற்குள் நிவாரணம் கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் குணமாகியுள்ளது. காமாலைக்கான சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படுகிறது. தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் பாதி நேரத்தில்தான் தான் காமாலையில் இருந்து குணமடைகிறது காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அல்லது உடல் நீரின் மூலம் மற்றவர்களுக்கு காமாலை பரவுகிறது. பச்சை குத்தும் ஊசி, போதை மருந்து ஊசி போன்றவற்றின் மூலமும் இது பரவுகிறது. காமாலை மனிதனின் கல்லிரலை பாதிக்கிறது.
சனி, 12 ஏப்ரல், 2014
வெள்ளி, 11 ஏப்ரல், 2014
வியாழன், 10 ஏப்ரல், 2014
யூதர்களின் இரட்டை நாக்கு...
யூதர்களின் இரட்டை நாக்கு...
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர்
யூத வேதப் பண்டிதரும், புரோகிதருமாக இருந்தார்.
சத்தியத்தைப் பேசும் நபராகவும் இருந்தார் அவர்.
யூதர்களுக்கிடையில் அவருக்கு நல்ல
பெயர் இருந்தது. அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு மிகுந்த கண்ணியமும்,
மரியாதையும் அளித்தனர். பிரார்த்தனைகளுக்கும், மத வழிபாடுகளுக்கும் அப்துல்லாஹ் இப்னு
ஸலாமையே தலைமை வகிக்கச் செய்தனர்.
புதன், 9 ஏப்ரல், 2014
வேஷம் கலைத்த விஷம்! – ஃபைஜுர் ஹாதி AMB
வளர்ச்சி என்ற வாய் ஜாலம் முடிவுக்கு வந்தது!
தாங்கள் பேசும் வளர்ச்சி என்பது வன்முறையின் வளர்ச்சி, வேற்றுமையின் வளர்ச்சி, வன்மங்களின் வளர்ச்சி! எங்களின் ஒரே இலக்கு இந்துத்துவாவினை மட்டும் ஏற்கும் இந்தியா என்பதை மீண்டுமொரு நிரூபித்திருக்கிறது RSS (பாஜக).
என்ன ஒரு அருமையான நாடகம்!
பிரம்மாண்டமான அவதூறுகளுக்கும், வன்மங்களுக்கும் பெயர் போன RSS (பாஜக) இப்படி நடந்து கொள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லைதான்.
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரசின் புதிய அறிவுரைகள் ...
ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் யாத்ரீகர்கள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய உலக நாடுகளில் இருந்து மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் வருவார்கள். அதில் தொற்று நோய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை வெளியுறவு அமைச்சகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை:அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!
அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்: “பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை அக்கட்சி பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கிறது. மதவாதத்தை பேசி மதத்தை அரசியல்ரீதியாக செயல்படுத்த நினைக்கின்றனர்.
திங்கள், 7 ஏப்ரல், 2014
ஞாயிறு, 6 ஏப்ரல், 2014
முஸ்லிம்களுக்காகப் பேச யாரும் இல்லை!
அனைவருக்குமான வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம், வகுப்பு ஒற்றுமைதான் எங்களுடைய லட்சியம் என்றெல்லாம் கூறும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய கர்மபூமியான உத்தரப் பிரதேசத்தில், ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரண்டை மட்டும் ‘அப்னா தள்’ கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, மீதமுள்ள 78 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டும் குறிவைக்காமல் மேல்சாதியினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
நான் எழுதியிருப்பது சீரியஸான கேள்விகள். இங்கே பகடிகளும், நக்கலும் செய்து இதன் முக்கியத்துவத்தை நீர்த்துவிட வேண்டாம் - நரேன் ராஜகோபால்...
இஸ்லாமியர்களுக்கு ஏன் குஜராத்திலும், உ.பியிலும் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை ? இத்தனைக்கும் குஜராத்தில் 10%-ம், உ.பியில் 17%-ம் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கூட தரப்படாமல் இருட்டடிப்பு செய்வதின் பின்னிருக்கும் அரசியலென்ன ? அல்லது இப்படி தான் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர்களை மாநிலங்கள் வாரியாக பாஜக ஒதுக்கி, ஒடுக்க முற்படுகிறதா ?
Ab ki baar Modi Sarkar
திங்கள் கிழமை தேர்தல் அறிக்கை வருமென்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. திங்களன்று தேர்தலை சந்திக்கும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவின் ஒரு தொகுதிக்கும் பாஜக என்ன செய்ய விழைகிறது என்று கூட தெரியாமல், மக்கள் வாக்கு சாவடிக்கு
சனி, 5 ஏப்ரல், 2014
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது திட்டமிட்ட சதிச்செயல்:கோப்ரா போஸ்டின் ஸ்டிங் ஆபரேசனில் அம்பலம்!
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது திட்டமிட்ட சதிச் செயல் என்றும், கரசேவகர்கள் திடீரென கூடி இடிக்கவில்லை என்றும், இந்த சதித் திட்டம் குறித்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக தலைவர் அத்வானி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், பா.ஜ.க தலைவர் உமா பாரதி ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் கோப்ராபோஸ்ட் இணையத்தளம் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் தெரியவந்துள்ளது.மேலும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் பங்கேற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை வைத்து சங் பரிவார் அமைப்புகள் பயிற்சி அளித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
வியாழன், 3 ஏப்ரல், 2014
புதன், 2 ஏப்ரல், 2014
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)