Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 10 ஏப்ரல், 2014

யூதர்களின் இரட்டை நாக்கு...

யூதர்களின் இரட்டை நாக்கு...

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் யூத  வேதப் பண்டிதரும், புரோகிதருமாக இருந்தார். சத்தியத்தைப் பேசும் நபராகவும் இருந்தார் அவர்.
யூதர்களுக்கிடையில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு மிகுந்த கண்ணியமும், மரியாதையும் அளித்தனர். பிரார்த்தனைகளுக்கும், மத வழிபாடுகளுக்கும் அப்துல்லாஹ் இப்னு ஸலாமையே தலைமை வகிக்கச் செய்தனர்.

முஹம்மத் என்பவர் மக்காவில் இறைத்தூதுச் செய்தியைச் சொல்கிறாராம் என்ற செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு எட்டியது. தன்னை இறைத்தூதர் என்று சொல்கின்ற முஹம்மதைப் பற்றிய விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
தான் தினமும் படிக்கும் “ தோரா ” என்னும் தவ்ராத் வேதத்தில் இறுதித்தூதரைப் பற்றி வந்துள்ள விவரங்கள் முஹம்மதோடு ஒத்துப் போகின்றதா என்று அவர் பரிசோதித்துப் பார்த்தார்.
அத்தனை தகுதிகளும் அற்புதமாக ஒத்து வந்ததைத் கண்ட அப்துல்லாஹ்  இப்னு ஸலாம்  அப்பொழுதே மனதால் இறைத்தூதரை ஏற்றுக்கொண்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றடைந்தவுடன் அவர்களைக் காண்பதற்கு வந்திருந்த கூட்டத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமும் இருந்தார். அண்ணலாரிடம் தான் இஸ்லாமை ஏற்றக் கொண்டு முஸ்லிமாவதாக அறிவித்தார். யூதர்களுக்கு இந்தச் செய்தி தெரியாது. இஸ்லாமை யூதர்களுக்கு அறிமுகப்படுத்தும்படி அவர் அண்ணலாரிடம் கோரினார். அண்ணலாரும் யூதர்களை அழைத்தார்கள். இஸ்லாமை அவர்களிடம் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள். தீவிரமான கலந்துரையாடல் நடந்தது. என்னவானாலும் சரி, அவர்கள் அண்ணலாரை அல்லாஹ்வின் அறுதித் தூதராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
இறுதியில் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் யூதர்களிடம் இவ்வாறு கேட்டார்கள். “ ஹூஸைன் இப்னு ஸலாமைக் குறித்து தங்கள் கருத்து என்ன ? யூதர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸலாமை அப்படித்தான் அழைத்தார்கள். யூதர்கள் சொன்னார்கள் “ அவர் எங்கள் தலைவரும், தலைவரின் மகனும் ஆவார். புரோகிதரும், புரோகிதரின் மகனும் ஆவார். ”
அண்ணலார் கேட்டார்கள் “ நான் உங்களிடம் சொன்னதை அவர் அங்கீகரித்தால் நீங்கள் அங்கீகரிப்பீர்களா ? ”
யூதர்கள் “ அவர் ஒருபொழுதும் உங்களை அங்கீகரிக்க மாட்டார். ”
இத்தனையையும் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அண்ணலாரின் முன் வந்தார். அவர் சொன்னார் “ யூதர்களே, முஹம்மத் சொல்வதை நாம் விசுவாசிக்கலாம். நமது “தோரா” வில் (தவ்ராத்தில்) இவரைக் குறித்து பெயரும், லட்சணங்களும் விவரித்து வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா ? அதே இறைத்தூதர்தான் இவர். ”
கொஞ்சம் முன்பு அவரைப் புகழ்ந்து கூறிய யூதர்கள் அப்படியே “ அந்தர் பல்டி ” அடித்தார்கள். “நீ ஒரு பொய்யன். அறிவில்லாத முட்டாள் நீ. முட்டாளுடைய மகன் நீ. ”
பொதுமக்கள் எக்காலத்திலும் இப்படித்தான். அங்கீகாரம் கொடுக்கவேண்டுமெனில் யாராக இரந்தாலும் தங்களுடன் இருக்க வேண்டுமெனில் யாராக இருந்தாலும் தங்களுடன் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதற்காக வாக்கு மாறுவது அவர்களுக்கு ஒரு பிரச்சினையேயில்லை.
இந்தப் பிடிவாதத்திலிருந்து நாம் மீள வேண்டும். இறைவனின் நல்லடியார்களாக நாம் மாற வேண்டும்.

நன்றி விடியல் வெள்ளி ஜனவரி  2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக