மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு (தமுமுக அரசியல் பிரிவு) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவை அளித்திருக்கலாமே என்று சமூக அக்கறையுடன் கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம்.
- காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டு வந்தது.
- திமுக ஆதரவு கேட்டு வந்தது.
- கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கேட்டு வந்தது.
- திருமாவளவன் விசி கட்சிக்கு ஆதரவு கேட்டு வந்தார்கள்.
- ஆம் ஆத்மி ஆதரவு கேட்டு வந்தது.
- அதிமுக கட்சியின் இரண்டாம கட்ட தலைவர்கள் கூட வாபஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வந்தார்கள்.
ஆனால் மமக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆதரவு கேட்டு வந்ததா?
இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபா அவர்கள் ததஜ தலைமைக்கு வந்து மயிலாடுதுறையில் மமகவுக்கு ஆதரவு தர வேண்டுமென்று மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.
ஹனீபாவுடைய கோரிக்கைக்கு ததஜ தரப்பில் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அபகரிக்க முயன்றது, ஜனசாக்களை நபி வழியில் அடக்க விடாமல் தடுத்தது, தவ்ஹீத்வாதிகளுக்கு இடையூறு செய்தது, தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்வதற்கு துணை போனது போன்ற அநீதிகளுக்கு வருத்தம் தெரிவித்தும் மீண்டும் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்றும் வாக்குறுதி கடிதம் தமுமுக- மமக தரப்பில் எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எங்கள் செயற்குழுவில் எடுத்து வைக்கிறோம் என்ற பதில் கொடுக்கப்பட்டது.
ததஜவின் நிர்வாகிகளிடத்தில் அப்போலோ ஹனிபா இதோ மமகவிடம் அத்தகைய கடிதம் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ததஜ அலுவலகத்தில் இருந்து கொண்டு தமுமுக தலைவர் ரிபாயி அவர்களுக்கு போன் செய்தார். ஆனால் ரிபாயி அவர்கள் அப்படியெல்லாம் கடிதம் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கிறோம் என்று ஹனீபா அவர்களுக்கு பதில் கொடுத்தார்.
தமுமுக இதுவரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அதனுடைய தொண்டர்கள் விஷயத்தில் செய்த அநீதிகள் எல்லாம் சரிதான் என்பது போல் நடந்து கொண்டார்கள்.
விசிக தலைவர் திருமாவளவனும் ததஜ அலுவலகம் வந்து மமகவுக்கு ஆதரவு தரலாமே என்று கேட்டார். அவரிடமும் இதே நிபந்தனையை ததஜ சொல்ல, தான் சென்று அவர்களிடம் தகவல்களை எடுத்து சொல்லி விட்டு தொடர்பு கொள்கிறேன் என்று சென்றார். ஆனால் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட உண்மையான சகோதர சகோதரிகளே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனக்கும் தன்னுடைய தொண்டர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகளை எல்லாம் மறந்து தமுமுக- மமகவை ஆதரிக்கிறோம், ஆனால் அவர்கள் உறுதி மொழி கொடுக்க வேண்டும் என்று கூறியது.
இந்த உறுதிமொழியையும், வருத்தத்தையும் தமுமுக - மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படி நாங்கள் இவர்களை ஆதரிக்க முடியும்?
நன்றி LBK TNTJ
நீங்கள் சொல்வதெல்லாம் சும்மா வாதத்திற்கு வேண்டுமென்றால் ஒத்துவரலாம். ஒரு விசயத்தை எப்படி வேண்டுமானாலும் திரித்து நமக்கு சாதகமாக கூறலாம்.
பதிலளிநீக்குபள்ளியை அபகரிக்க முயன்றார்கள் என்றால், அவர்களும் அதில் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் செய்வதற்காக தானே? அல்லாஹ்வின் இல்லம் அவனுக்கே சொந்தமானது. தனி மனிதனோ இயக்கமோ உரிமை கொண்டாட முடியாது.
(ஜனசாக்களை நபி வழியில் அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது).. தௌஹீத்வாதிகள் தவிர மற்ற எல்லா முஸ்லிம்கள் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? முஸ்லிம் லீக் கட்சியினர் எப்படி அடக்கம் செய்கிறார்கள்? கருணாநிதி மற்றும் காபிர்கள் எப்படி செய்கிறார்கள்? தமுமுக மட்டும் தான் தௌஹீத் கொள்கையை அழிக்க முயற்சிக்கிறதா? JM ஹாரூன் அவர்கள் உங்கள் இயக்கத்திற்கு எதிராக செயல்படவே இல்லையா?
இவர்களையெல்லாம் நீங்கள் ஆதரிக்கவில்லையா?
உங்கள் விளக்கம் நடுநிலையானவர்கள் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை..
ஒருவேளை புதுச்சேரியில் நீங்கள் செய்தது போல யாருக்கும் ஆதரவு இல்லை.. என்று நடுநிலமையாக அறிவித்திருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து..!!!
/////ஒருவேளை புதுச்சேரியில் நீங்கள் செய்தது போல யாருக்கும் ஆதரவு இல்லை.. என்று நடுநிலமையாக அறிவித்திருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து..!!!////
நீக்குஉங்களால் முடியவே முடியாது அப்பவும் நீங்கள் விமர்சனம் செய்யத்தான் செய்வீர்கள்.
என்ன சொல்ல வருகிறீர்கள்.. நீங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? TNTJ மட்டும் தான் மற்றவர்களை விமர்சிக்க தகுதி உண்டு என்கிறீர்களா?
நீக்குTNTJ விமர்சனத்துக்கப்பாற்பட்டவர்கள் என்று எங்காவது சொல்லிக்கொண்டு திரிகின்றார்களா?
நீக்குஎன்னங்கடா நடக்குது மமகவில்
நீக்குமயிலையில் ஹைதர் அலி MP யாக வர ஜவாஹிருல்லாவும் தமிம் அன்சாரியும் விரும்பவில்லை
சென்னை மண்ணடியில் கோவை ரஹ்மத்துல்லா பேச்சு ஆதாரம்
ததஜவிடம் இருக்கிறது.
இப்ப பேசுங்கடா தறுதலைகளா நடுநிலைவாந்திகளா???
இது தான் உங்கள் தலைமை உடைய கருத்து என்றால்? நாம் அவைவரும் பாடுபடவேண்டியது முஸ்லிம் அனைவரும் தான்? உங்கள் தலைமை ஏன் இப்படி ஒருதலை பட்ச்சமாக முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை, நோக்கம் தொலைநோக்கு பார்வையாக இருக்கவேண்டும். ஒரு செலருக்கு அநீதி இலக்பட்டாதாள் அனைவரையுன் சம்மதபட்டுதுவது சரி இல்லை
பதிலளிநீக்குஉங்கள் கொள்கைகளை எதிர்பவர்களுக்கு ஆதரவு தர முடியாது என்று சொல்கிரீர்கள்.ததஜ நடத்தும் போராட்டங்களுக்கு இசுலாமியர்களே வாங்க...பணம் கொடுங்கள் என்று எந்த மூகத்தை வைத்து பேசுகீறீர்கள்..
பதிலளிநீக்குமணிசங்கர் அய்யர், வசந்தகுமார், திருமா, கி.சாமி, கருணாநிதி & கோ எல்லாரும் TNTJ கொள்கைகளை ஆதரிப்பவர்களா??
பதிலளிநீக்குஹைதர் அலிக்கு ஆதரவு தர முன் வந்த தவ்ஹீத் ஜமாஅத் , புறக்கணித்த மமக
நீக்குமார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்
அறிந்துகொள்ள லைக் செய்யுங்கள்.
https://www.facebook.com/onlinepj.qa
அன்புள்ள சகோதரர்களே :
பதிலளிநீக்குஇதில் நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால்?
காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட்,திருமாவளவன் விசி,மற்றும் ஆம் ஆத்மி இவைகள் எல்லாம் எப்படி ஒரு அரசியல் கட்சியோ அதேபோல்
மமக ஒரு அரசியல் கட்சி என்பதில் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை ட்தான்
மமக வந்து ததஜ விடம் ஆதரவு கேட்பதில் என்ன தயக்கம் இருக்கிறது.
காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட்,திருமாவளவன் விசி,மற்றும் ஆம் ஆத்மி பொன்றகட்சியின் தலைவர்கள் நேரில் வந்து அதரவு கேட்டது போல் இவர்கலுக்கு என்ன தயக்கம் உண்மையிம் மமக வெற்றி பெற்று தனக்கு (மமக) ஆதாயம் தேடாமல் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய கட்சியாக இருந்தால் (ததஜ) விடம் அதரவு கேட்பதில் என்ன வெக்கம் இருக்கிறது.
மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய பொதுமக்களுக்கும் அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படிஆதரவு தருவார்கள்..
இன்ஸாஅல்லாஹ்
அல்லாஹ் (மமக) விற்க்கு தக்க பதில் அடி தருவான்.
இவண்
அபுசாலிகா
மயிலாடுதுறையில் மமகவினை ஏன் எதிர்க்க வேண்டும்?
பதிலளிநீக்குஹைதர் அலி அவர்கள்
-வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது சமுதாய சொத்துக்களை அடுத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்தவர் . (மாயாஜால் கும்பலுக்காக கானத்தூர் வக்ஃப் சொத்தினை தாரை வார்க்க முயற்சித்தார், திருச்சி கலைஞர் அறிவாலயம் கட்ட வக்ஃப் சொத்து தாரை வார்க்கப்பட்டது மற்றும் பல)
-வக்ஃப் வாரிய தலைவராக இருக்கும் போது தவ்ஹீத் பள்ளிவாசல்களை கபளீகரம் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்தவர்.
-அரசியல் பகைக்காக தவ்ஹீத் பள்ளிவாசலில் கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என பத்திரிகைகளுக்கு பச்சை பொய்யினை பேட்டியாக கொடுத்தவர்
- தீவிரவாதிகளோடும் தவ்ஹீத் ஜமாஅத்தினை இணைத்து பச்சை பொய்யினை பத்திரிகைகளுக்கு பேட்டியாக கொடுத்தவர் தான் இவர்.
இவருக்கு எப்படி ஆதரவினை கொடுக்க முடியும்?
இவர் தான் இப்படி என்றால் இவரது மமக இவரை விட பன்மடங்கு ஏகத்துவத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் துரோகம் இழைத்துள்ளனர், இழைத்துக்கொண்டே வருகின்றனர்.
இத்தகைய சமுதாய துரோகிகளுக்கு எங்களின் ஆதரவு ஒரு போதும் இருக்க கூடாது. தலைமையே ஆதரிக்க சொன்னாலும் இவர் விஷயத்தில் ஆதரிக்க எங்கள் மனம் இடம் கொடுக்காது.
மமக ஆதரவாளர்களும், நடுநிலைவாதிகளும் இப்போ க்யூவிலே வந்து கொந்தளிக்கலாம். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது இவரும் இவரது மமகவினரும் நம்பிக்கை துரோகிகள் அதனால் தான் ஆதரவு கூடாது என்கிறேன். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினை பொறுத்தவரை இ.யூ.முஸ்லிம் லீக்கினர் நம்பிக்கை துரோகிகள் அல்லர். அவர்களை நாங்கள் அரசியல்வாதிகளாகவே பார்க்கிறோம். ஆகவே வேலூர் தொகுதியில் சகோ. அப்துல் ரஹ்மானை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தால் முழு மனதோடு ஏற்றுக்கொள்வோம் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன்.
என்னங்கடா நடக்குது மமகவில்
பதிலளிநீக்குமயிலையில் ஹைதர் அலி MP யாக வர ஜவாஹிருல்லாவும் தமிம் அன்சாரியும் விரும்பவில்லை
சென்னை மண்ணடியில் கோவை ரஹ்மத்துல்லா பேச்சு ஆதாரம்
ததஜவிடம் இருக்கிறது.
இப்ப பேசுங்கடா தறுதலைகளா நடுநிலைவாந்திகளா???
ஹைதர் அலிக்கு ஆதரவு தர முன் வந்த தவ்ஹீத் ஜமாஅத் , புறக்கணித்த மமக
நீக்குமார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்
அறிந்துகொள்ள லைக் செய்யுங்கள்.
https://www.facebook.com/onlinepj.qa
அன்புள்ள சகோதரர்களே... அஸ்ஸலாமு அலைக்கும்..
பதிலளிநீக்குஇதுவரை ஒற்றுமைக்கு த த ஜ மட்டும்தான் குந்தகம் விளைவிக்கிறது மற்றவர்கள் எல்லாம் ஒற்றுமைக்கு வரிசைகட்டி நிற்கிறார்கள் என்பது போல முகநூலில் த த ஜ வை கழுவி குடிக்காத ஒற்றுமை சொம்புகளே இல்லை என சொல்லும் அளவுக்கு வசை மாறிகள்...
ஆனால் நமக்கு , நமது ஜமாத்திற்கு இவர்கள் செய்த இடையூறுகளைப்போல் இனி செய்ய மாட்டோம் , ஏகத்துவப்பிரச்சாரத்திற்கு இனி இடையூறு செய்ய மாட்டோம் என உறுதி மொழி கொடுத்தால் நாம் அவர்களை ஆதரிக்க முன் வருவோம் , அவர்கள் நம்மை தேடி வராவிட்டாலும் கூட என இறங்கி வந்து தூது விட்டும் அவர்கள் மறுத்து விட்டார்கள்...
அதுமட்டுமல்ல, ஹைதர் அலியிடம் பேசிய 23 ஜமாத்துகளின் கூட்டமைப்பின் தலைவர் ஒற்றுமை கோரிக்கை வைத்த போது ஜவாஹிருல்லாஹ்வும் , அன்சாரியும் மறுத்துவிட்டதாக ஹைதர் அலி சொல்லியது ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது ..
இப்போது ஒற்றுமை கோஷம் போடும் சகோதரர்கள் என்ன நிலை எடுக்க போகிறீர்கள்...?
ம ம க தான் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறது என மக்களிடம் கொண்டு செல்லதயாரா உண்மையை..?
அல்லது ஹைதர் அலிக்கு வேட்டு வைக்கும் முகமாக ஒற்றுமைக்கு மறுத்த ம ம க தலைமையை விட்டு ஹைதர் அலியை விலகச்சொல்ல தயாரா...?
ஆளை விடுங்கப்பா..!! உங்க குழாயடி சண்டையிலே நாங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்..
நீக்குததஜவுக்கு ஒரு அடியென்றால் முன்வந்து வேடிக்கை பார்க்கின்றீர்கள் புரட்டு வாதம் புரிபவர்களுக்கு பதிலடி கொடுக்கும்போது மட்டும் தலைதெரித்து ஓடுகின்றீர்கள் நல்லாயிருக்குது சகோ முஹி(MOHI)உங்களது நடுநிலை.
நீக்குஎதை செய்தாலும் அதை நியாயப்படுத்த போராடும் ஒரு அமைப்பு. இவருக்கு ஓட்டு போடாதீர் அவருக்கு ஓட்டு போடாதீர் என்று மாறி மாறி பேசினாலும் அதையும் நியாயபடுத்த ஒருகூட்டம். உடன் படிக்கை சரியாக செய்ய தெரியாத மூடர் ஆட்சியாளர்கள். அதற்க்கு வக்காலத்து வாங்கும் தொண்டர்கள்.
பதிலளிநீக்குஇவர்களுக்கு ஒரு முஸ்லிமின் குரல்:
மற்றவர்களை காட்டிலும் மார்க்க விசயத்தில் நீங்கள் தான் முன்னோடியாக நான் கருதுகிறேன். ஆனால் உங்களின் ஆணவப் பேச்சு என்போன்றோரை முகம் சுளிக்க வைக்கிறது.
ஆதரவு தெரிவித்த விசயத்தில் (முழுமையாக ஜெயலலிதாவிடம் பேசாமல்) TNTJ தவறு இளைத்து விட்டது அதற்காக மக்கள் மத்தியில் நாங்கள் மன்னிப்பை கோருகிறோம் என்று கூற முடியுமா? 10 நாட்களுக்கு முன் எலக்சன் நடந்திருந்தால் உங்களை பின்தொடரும் மக்கள் நிலைக்கு யார் காரண கர்த்தா?
ஆட்சி வேண்டாம் அதிகாரம் தான் வேண்டும் என்பது முட்டாள் தனம்.
இதனால் நான் நடுநிலையாளன் என்று கூறுவதினால் உங்களுடைய பார்வைக்கு நான் அயோக்கியனாகவே, திராணி இல்லாதவனாகவோ, செம்பு தூக்குபவனாகவோ இன்னும் நீங்கள் மற்றவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டி தராத் வகையில் பேசுவீர்களோ அதுபோல் இருந்து விடுகிறேன். அதில் எனனக்கு துளியும் களங்கம் இல்லை. காரணம் நாளை தீர்ப்பு அழிப்பது TNTJ வோ அல்லது நடுநிலையாளர்களை கேவலப்படுத்துபவரோ அல்ல !
அருமையான கருத்துரை..!!
நீக்குஇவர்களுக்கு பெட்டி கூடுதலாக கிடைதால் பாஜக(மோடி)கூட ஆதரவு தருவார்கள்
நீக்கு