Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 17 ஏப்ரல், 2014

தொடரும் பயணங்கள் - பாகம் 4


உயிரும் நாமும்

அடுத்து இந்த உயிரை அருட்கொடையாகக் கொடுத்த வல்ல ரஹ்மானால் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை நாம்பிறப்பதற்கு முன்பே ( நம் ரூஹாக இருக்கும் போது ) நம்மிடம் ஒப்பந்தமாக வாங்கிக் கொண்டான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


இது நமக்கு ஆச்சரியமாகவே இருக்கும். அது எப்படி எப்பொழுது எங்கே என்றெல்லாம் கேட்போம் இதை நமக்கு நினைவுபடுத்தும் முகமாகவே சூரத்துல் அஃராபில் அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்.

நபியே உம்முடைய இறைவன் ஆதமுடைய மக்களின் ( மனிதர்களின் ) முதுகுகளிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை வெளியாக்கி அவர்கள் மீது அவர்களையே சாட்சியாளர்களாக்கி நான் உங்கள் இறைவன் அல்லவா ? என்று கேட்டதை எண்ணிப்பார்ப்பீராக. அதற்கு அவர்கள் ஆம் ! நாங்கள் சாட்சியமளிக்கிறோம் என்றனர். இதில் நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோம் என்று மறுமைநாளில் நீங்கள் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே ( இந்த உறுதி மொழியை அவன் பெற்றான் ).                                                                                                                                 அல்குர்ஆன் 7 : 172

நமது முடிவுறா பயணத்திற்கான கட்டுச்சாதம் கட்டும் நாம் மேற்கூறப்பட்டுள்ள வசனத்தை நமது கட்டச்சாதத்திற்கு மிக முக்கியமானதாக எண்ணிக் கொள்ள வேண்டும். நாம் நமது தந்தையின் முதுகந்தண்டில் ரூஹாக ( உயிராக ) இருக்கும் போது அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்று கூட்டினான். உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்கள், இனி பிறக்கப்போகிறவர்கள், இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என அனைவரும் அல்லாஹ்வின் முன்பு அந்த மிகப்பெரிய மைதானத்தில் ஒன்று கூடி நின்றோம்.

அந்த மைதானத்தின் பெயர் ஆலமே அர்வாஹ் ( உயிர்களின் உலகம் ) உயிர்களின் வரலாற்றுத் துவக்கம் இங்கிருந்தே ஆரம்பமாகிறது. அப்போது கண்ணியமும் மாட்சிமையும் பொருந்திய அல்லாஹ் நம்மை நோக்கி ஒரு தாய் தனது குழந்தையைப் பார்த்து கேட்பதை விட மிகவும் நளினமாகவும் அன்பாகவும் கேட்டான்.

நான் உங்கள் இறைவன் அல்லவா ?

நாம் கூறினோம் : ஆம் ! என்று

இதை முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் இறைமறுப்பாளர்கள் என அனைவரும் இதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தனர். யா அல்லாஹ் எங்களுக்கு நீ எந்த வழியையும் காட்டவில்லையே என்று நாம் அல்லாஹ்வை குற்றம் பிடிக்கக்கூடாது என்பதற்காக  நமக்கு நபிமார்களையும் (அலை ) ரசூல்மார்களையும் ( அலை ) வேதங்களையும் சுகுபுகளியும் இறக்கி வைத்தான். ஆனால் நாமோ மறுத்தோம் மாறு செய்தோம், ( நவூதுபில்லாஹி மின்ஹா )

இன்ஷா அல்லாஹ் தொடரும்
முஹம்மது நாஜிம்
மூன்றான் பாகத்தை பார்க்க



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக