Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 ஏப்ரல், 2014

ஜெயலலிதா வின் ப.ஜ.க. எதிர்ப்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைவதர்கு என்ன இருக்கிறது...

ஜெயலலிதா வின் ப.ஜ.க. எதிர்ப்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைவதர்கு என்ன இருக்கிறது 

ஜெயலலிதா பிஜேபியை விமர்ச்சித்து விட்டார் என பாக்கர் குழுவும் த.த.ஜ.வில் சிலரும் பெருமையுடன் பதிவுகளை பதிந்து அது தங்கள் சாதனை என மார்தட்டி கொள்கிறார்கள்

அவரதுபேச்சில முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைவதர்கு என்ன இருக்கிறது
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பேன் என்று பேசினாரா??
பாபர் மசூதி கட்டி தர முயர்ச்சி எடுப்பேன் என பேசினாரா??
கஷ்மீருக்கு தனித்துவம் வழங்கும் 370 வது பிரிவை நீக்க விட மாட்டேன் என்று பேசினாரா???
ஒன்றும் இல்லை அவர் காவேரி விசயத்தில் ப.ஜ.க வை எதிர்த்து இருக்கிறார் ப.ஜ.க.வை எதிர்கும் போது கூட முஸ்லிம்கள் விசயத்தை குறிப்பிட்டு விட கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளார்

அவரது இது போன்ற நரிதனங்களால் 

அ.தி.மு.க வின் தேர்தல் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதர்கு உரிய அறிகுறிகள் தெளிவாக தெரிவதால்ஜெயல லிதாவும் அவரது அமைச்சர்களும் அலறி கொண்டுள்ளனர்

முகநூலிருந்து

4 கருத்துகள்:

  1. http://www.tntj.net/241810.html : இன்ஷா அல்லாஹ் வரும் 15.04.2014 செவ்வாய் கிழமை மாலை 3.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மகாலில் அதிமுகவுக்கு ஆதரவு வாபஸ் மற்றும் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக அவரச செயற்குழு நடைபெறவுள்ளது.

    இன்று யாருக்கு ஆதரவு என்று தெரிவிப்பதாக சொன்னவர்கள், நாளைக்கு மாற்றியதன் காரணம்??

    ஆதரவு ஏதாவது சிறிய ஜெயிக்க வாய்ப்பில்லாத (Communist, Congress, AAP) கட்சிகளுக்கு என்று அறிவித்து முஸ்லிம்கள் ஒட்டுகளை சிதறடிக்காமல் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்புவோமாக..!!!

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஆத்மியினர் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையில் ஆதரவு கோரினர்!

    காங்கிரஸ் கட்சியினர் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆதவுர கோரினர்!

    இன்று திருச்சியில் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்குமோ??

    பதிலளிநீக்கு
  3. """தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்க்குழு கூடியது.

    செயற்க்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தொகுதிகள் ஆதரவு விபரம்.

    சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி

    தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி

    மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி

    மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.""

    எல்லாம் சரி...!! ஹைதர் அலிக்கு வாக்களிப்பதால் என்ன குறைந்து விடப்போகிறீர்கள். JM ஹாரூன் ஐ ஆதரித்த நீங்கள் இவரையும் முஸ்லிம் வேட்பாளர் என்ற முறையில் ஆதரித்திருக்கலாம்..!!

    பதிலளிநீக்கு
  4. puli pachithalum puilai thingathu

    பதிலளிநீக்கு