Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

இனி நாம் நமதூர் பிரச்சனைகளை எப்படி கையாள போகிறோம்....

ரகசிய கேமர கூறும் உண்மைகள்...

உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு Hide and Seek ஒளிந்து பிடித்து விளையாடுவது. இவ்விளையாட்டினை விளையாடும் குழந்தைகள் ஒளிந்திருப்பவர்களை கண்டு பிடிக்க இயலாத சமயத்திலோ அங்கிருக்கும் பெரியவர்களின் உதவியை நாடும்பொழுது அப்பெரியவர்களின் தவறான மாற்று இடங்களை கைகாட்டி விடுவதன் மூலம் விளையாட்டு இன்னும் விறுவிறுப்பு அடையும்.


அது போல தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் நமதூரின் எதிர்காலம் மக்களின் பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக உள்ளது. இனியும் படித்தவர்கள், சமுக ஆர்வர்வலர்கள் மற்றும் ஊரின் மீது அக்கரை உள்ளவர்கள் முன்வருவார்களா ?

இதில் ஒரு சகோதரனுக்கு மட்டும் பலமாக அடிபட்டுள்ளது. தற்போது அந்த சகோதரன் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்த சகோதரர் பூரண குணம் அடைய நாம் அனைவரும் நம்முடைய தொழுகையில் தூவா செய்வோம்.

இனி நாம் என்ன செய்ய போகிறோம். இது தற்செயலாக நடந்த சம்பவம் போல் தெரியவில்லை. பசுத்தோல் போர்த்திய புலியும் நம்மிடைய உலாவருகின்றன. அதன் கூடவும் மிக நற்பாக நமதூர் மக்கள் பலகிவருகின்றனர்.

எப்பொழுது எல்லாம் நாம் நம்முடைய மார்க்கத்தையும் வரலாற்றையும் தெரியாமல் இருக்கின்றோமே அப்பொழுது எல்லாம் இது போன்ற கோழைத்தனமான செயல்கள் நம்மில் வெளிப்படும்.

“உமர் முக்தாரின் பேரக்குழந்தைகளை விரட்டியடிக்கலாம் என கடாஃபி கருதுகிறார். அவரை பதவியிலிருந்து இறக்காமல் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”
-    லிபியாவில் கடுமையான போராட்டம் நடைபெறும் போது அல்ஜசீரா தொலைக்காட்சி சேனலில் கேட்ட ஒரு பெண்மணியின் குரல் இது.

இனி நமதூர் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இது போன்ற பாசிச சிந்தனை உள்ளவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். மற்றும் நமக்குள்ளே உள்ள கருப்பு ஆடுகளையும் கலையவேண்டும்.
நமது நருபர்



2 கருத்துகள்: