பதுங்காதீர் - பதில் சொல்வீர்! .......
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் - அந்த இடத்திலே ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று ஒரு தேர்தல் அறிக்கையிலே பகிரங்கமாக
அறிவித்து ஒட்டுக் கேட்டு வருகிறார்கள் - அதற்குக் கறுப்புத் துண்டு வைகோவும், காந்திசீடர் மணியனும் சலாம் போட்டு பராக்குக் கூறுகிறார்கள் என்றால் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இப்படிப் பட்டவர்களா? என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.
இந்த நாட்டின் கோடானு கோடி சிறுபான்மை மக்கள் பற்றி மோடிக்கும் - அவர் கூட்டத்துக்கும் இருக்கும் எண்ண வோட்டம் நாடு அறிந்த ஒன்று. சிறுபான்மை மக்கள் மத்தியில் வைகோ எந்த முகம் கொண்டு சலாம் வைப்பார்?
கொள்கைவாதிகள் என்றும், குன்று போல் நிற்பார்கள். சந்தர்ப்பவாதிகளோ இப்படித்தான் கூனிக் குறுகி நிற்க நேரிடும்.
முகநூல் செய்தி
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக