Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 21 ஏப்ரல், 2014

8 ( 0 ) முஸ்லிம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக 8 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமத், இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவர் எம்.தாவூத் மியாகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ஏ.பாத்திமா முஸாபர், அகில இந்திய தேசிய லீக் தலைவர் இனாயதுல்லா, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது


மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கடுமையாக போட்டி நிலவுகிறது. 19 தொகுதிகளில் 5 முனைப் போட்டியும், மற்ற தொகுதிகளில் 4 முனைப் போட்டியும் நடக்கிறது. இந்நிலையில், பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்று பலர் மாறி மாறி பேசி வருகின்றனர். முஸ்லிம் மக்களின் இடஒதுக்கீட்டுக்கு முதலில் நடவடிக்கை எடுத்தவர் முதல் வர் ஜெயலலிதாதான். இது தொடர் பாக ஆணையம் அமைத்து இட ஒதுக்கீடு வழங்கும் நேரத்தில் ஆட்சி மாறிவிட்டது. இதையடுத்து, ஆணையத்தின் நிர்ப்பந்தத்தால்தான் அப்போதைய முதல்வர் கருணாநிதி, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினார்.

எங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க தற்போது முதல்வரிடம் கேட்டுள்ளோம். அதை நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளார். மேலும், திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், சிறையில் அவதிப்படும் 55 முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக தேர்தல் முடிந்த பிறகும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம். அதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டில் தான் எத்தனை முஸ்லிம் லீக்.. படிக்கும்போதே மூச்சு வாங்குகிறது.

    இந்த கேடுகெட்ட ஒவ்வொரு அமைப்பிற்கும் நிர்வாகிகள் போக எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள்? 5 அல்லது 10 பேராவது இருப்பார்களா என்பது சந்தேகமே..!

    PJ வின் அடுத்த வாரிசு என்பது போல அவரையே அண்ணன் அண்ணன் என்று சுற்றி சுற்றி வந்த பாக்கர் தனி அமைப்பு துவங்கியதின் கரணம் என்ன? யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..!!

    பதிலளிநீக்கு
  2. இவர்கள் எல்லாம் யார்? நாங்களும் இருக்கிறோம் என்று கூவினாலும் உங்களை சமுதாய மக்களுக்கு தெரியுமா? ஒருகணம் சிந்தித்து பாருங்கள்? நீங்கள் இருப்பதோ நாலுபேருதான்

    பதிலளிநீக்கு