Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 3 ஏப்ரல், 2014

புவி வெப்பமயமாகி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

புவி வெப்பமயமாகி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

புவி வெப்பமயமாவதால் இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு ஆபத்து ஏற்படும் என சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் நிலவும் பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற
அறிவியல் பூர்வமான தகவல்களை தெரிவிக்கும் இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படுகிறது.
ஐ.பி.சி.சி. எனப்படும் நாடுகளுக்கு இடையோன சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு ஜப்பானில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காடுகள் அழிக்கப்படுவது, தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
புவி வெப்பமயமாகி, பல பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன, கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச நாடுகளில் பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளில், உணவுப் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்தியாவில், காற்றின், வெப்பத்தின் தன்மை அதிகரித்துள்ளது. பருவ மழை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. கங்கை நதியிலும், நீரோட்டம் குறைவால் அங்கு அதிகமாக கிடைக்கும் மீன் வளம் குறையும்.
மேலும் இதுபோன்ற பிரச்சினைகளால் விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதால், உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். அதிகமாக பயன்படுத்தப்படும், கோதுமை, அரிசி ஆகியவற்றின் விளைச்சல் குறையும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசை வற்புறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக