Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை:அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்: “பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை அக்கட்சி பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கிறது. மதவாதத்தை பேசி மதத்தை அரசியல்ரீதியாக செயல்படுத்த நினைக்கின்றனர்.

“மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி: “பாஜக தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது இந்துக்களின் வாக்குகளை ஈர்க்கவே ஆகும். முற்றிலும் இந்துதுவாவின் பிரதிபலிப்புதான் பாஜக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமானது.
அரசியலமைப்பின் அடிப்படையில் ராமர் கோயில் அமைக்கப்படும் என்றால், பாபரி மஸ்ஜித் எந்த அரசியல் அமைப்புசட்டத்தின் மூலம் அகற்றப்பட்டது எனபதை பாஜக விளக்க வேண்டும்.”ஆம் ஆத்மி கட்சி: “ராமர் கோயில் கட்டப்படும்; சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள், வகுப்புவாத மற்றும் பிரிவினைக் கொள்கைகள்தான் பாஜகவின் உண்மையானநோக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும்,தேர்தல் சீர்திருத்தத்துக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காததில் இருந்தே பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.
“ஜம்மு – கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா: “சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முதலில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது பாஜக இது குறித்து அக்கறை காட்டியதா என்று நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும். பாஜக இதற்கு முன்னரும் இதே அடிப்படை கொள்கைகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
”தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா: “பாஜக தனது கனவுகளை எல்லாம் தேர்தல் அறிக்கை என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது.”காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி: “அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி தரப்படும் என்று பாஜக சொல்கிறது. ஆனால் இதற்கெல்லாம் எங்கிருந்து
பணம் வரும்? எப்போது வரும்? என்பதை அக்கட்சி விளக்கவில்லையே.”மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு திரிபுரா, அசாமில் இன்று நடைபெற்றது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களில் பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக