Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரசின் புதிய அறிவுரைகள் ...

ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் யாத்ரீகர்கள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய உலக நாடுகளில் இருந்து மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் வருவார்கள். அதில் தொற்று நோய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை வெளியுறவு அமைச்சகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ஜியாத் அல் மெமிஷ் கூறுகையில்,
தொற்று நோய்கள் குறித்து உலகம் முழுவதும் நடப்பதை அரசு கண்காணித்து வருகிறது. உலகம் முழுவதும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் தெரிவித்துள்ள தேவைகளின்படியே சுற்றறிக்கை விட்டுள்ளோம். மஞ்சள் காய்ச்சல், சலி, போலியோ, புட் பாய்சனிங் உள்ளிட்ட நோய்கள் குறித்து அரசு எச்சரிக்கையாக உள்ளது. யாத்ரீகர்கள் பயணத்தை துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாக அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
வயதானவர்கள், இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை மற்றும் மூச்சுவிட திணறும் நபர்களை தங்கள் பயணத்தை ஒத்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
யாத்ரீகர்களை அழைத்து வரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதில் கொசுக்கள் இல்லை என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக