Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அல்லாஹ் இந்த நாட்டைப் பாதுகாக்கட்டும்!

அல்லாஹ் இந்த நாட்டைப் பாதுகாக்கட்டும்!

டில்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பெற்ற வெற்றியை பலரும் பல விதமாக அலசினார்கள். ஃபாசிஸ்டுகளும் அலசினார்கள். அந்த அலசலின் முடிவு இப்படி இருந்தது:
டில்லியில் முஸ்லிம்கள் 40 சதவீதம் உள்ளனராம். அவர்கள் வழக்கமாக
காங்கிரசுக்குத்தான் வாக்களிப்பார்களாம். இந்த முறை அவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தார்களாம். முஸ்லிம்களை தாஜா செய்ய அரவிந்த் கேஜ்ரிவாலும் முஸ்லிம் முல்லாக்களை வைத்துப் பிரச்சாரம் செய்தாராம். அதனால்தான் இந்த வெற்றியாம்.
முஸ்லிம்களின் ஆதரவுடன் பெற்ற வெற்றி என்பது பயங்கரவாதிகளின் ஆதரவுடன் பெற்ற வெற்றி என்று மறைமுகமாக சொல்லி முடித்திருந்தனர்.
ஃபாசிஸ்டுகளின் கருத்துக்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தை, இலக்கிய அந்தஸ்தை பெற்றுத் தரும் வேலையில் ஈடுபட்டு வரும் திருவாளர் ஜெயமோகன் அவர்களும் அதை இப்படி எழுதினார்:
“முஸ்லிம்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தனர். காரணம் பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் விவகாரம். முஸ்லிம்கள் இந்தியாவில் தனித்து இயங்கும் மனநிலை உள்ளவர்கள். பயங்கரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தங்கள் சமூகத்திற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையாக நினைப்பார்கள். அதனால் மொத்தமாக ஆம் ஆத்மிக்கு வாக்களித்தார்கள்.”
ஃபாசிஸ்டுகளின் கருத்துகளுக்கு சமூக அந்தஸ்தை பெற்றுத் தரும் வேலையில் ஒரு ஜெயமோகன் மட்டுமா இறங்கி இருக்கிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது தனி ஆய்வுக்குரியது. போகட்டும்.
ஃபாசிஸ்டுகள் தங்களுக்கு எதிராக வருபவர்களை கூடுதலாக எதிர்க்க வெறுக்க அவர்கள் முஸ்லிம் ஆதரவாளர்கள் என்ற காரணத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். அந்த அடிப்படையில் ஃபாசிஸ பிரச்சாரகர்கள் “ஆம் ஆத்மியா? அல் உம்மா ஆத்மியா?” என்று எழுதி வருகின்றனர்.
இதனுடைய ஒரு தொடர்ச்சிதான் மோடி கேஜ்ரிவாலை ஒரு பாகிஸ்தான் ஏஜண்ட் என்று சொன்னது.
ஃபாசிஸ்டுகளுக்கு எதிராக கேஜ்ரிவாலின் குடைச்சல் அதிகரித்தபோது முகநூலில் நாம் ஒரு குறிப்பை எழுதினோம். அது, ”விரைவில் கேஜ்ரிவாலின் உயிருக்கு இந்தியன் முஜாஹிதீன் குறி என்று செய்தி வரும். அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் பழியும் முஸ்லிம்கள் மீது விழும். ஃபாசிஸ்டுகளும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். கர்கரேக்கு நடந்தது போல் ஒரு முயற்சி மேற்கொள்ளப் படும்.”
இதை எழுதிய நான்கு நாட்களில் அப்படி ஒரு செய்தி வந்தது. இதோ இப்பொழுது மீண்டும் அந்தச் செய்தி வந்திருக்கிறது. இவர்களின் நாடித் துடிப்பை அறியும் விஷயத்தில் நாம் நன்றாக தேறி விட்டோம் என்று நினைத்துக் கொண்டோம்.
இப்போது ஃபாசிஸக் கூடாரம் சற்று கலகலத்துப் போயிருக்கிறது. காரணம், ஜஸ்வந்த் சிங்கின் இராஜினாமா, முரளி மனோகர் ஜோஷியின் அங்கலாய்ப்பு, அத்வானியின் அதிருப்தி, சுஷ்மாவின் ஏமாற்றம், சிவசேனாவின் சூடு என்று நாளொரு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஜஸ்வந்த் சிங்கின் தொகுதியில் மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் குத்திக் கிழித்துக் கொண்டிருந்த படத்தைக் காட்டினார்கள்.
நண்பருடன் அந்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தபோது, “பாருங்கள் விரைவில் எங்காவது குண்டு வெடிக்கும். ஒட்டுமொத்தக் கவனமும் திசை திருப்பப்படும். இந்தக் குழப்பங்களிலிருந்து சுலபமாக இவர்கள் வெளி வருவார்கள். அதுதானே வாடிக்கை. எந்த அப்பாவிகள் பலியாகப் போகிறார்களோ? எந்த அப்பாவிகள் அதற்குப் பழியாக போகிறார்களோ?” என்று சொன்னோம்.
உடனே நண்பர், “ஆமா ஆமா… நான் உடனே இதை என் முகநூலில் போடப் போகிறேன்” என்று சொன்னார்.
“அல்லாஹ் அதிலிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்கட்டும்” என்பதையும் சேர்த்துப் போடுங்கள் என்று அந்த நண்பரிடம் சொல்லாமல் விட்டதற்காக பின்னர் வருந்தினோம்.
முஹம்மது ஃபைஸ்
தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக