Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உலகின் மிகச் சிறந்த இடங்களில் துபாய் முதலிடம்!

துபாய்: உலகில் காணவேண்டிய மிகச் சிறந்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாய் முதலிடம் பிடித்துள்ளது.
சுற்றுலா செல்பவர்களுக்காக பயண ஏற்பாடுகளை மேற் கொள்ளும் உலகின் மிகப் பெரிய இணையதளமான “ட்ரிப் அட்வைசர்”, 2014-ஆம் ஆண்டுக்கான ‘ட்ராவலர்ஸ் சாய்ஸ்’ விருதுக்காக உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோல்கள் கொண்டு பட்டியலிட்டது.அதில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.மக்கள் கண்டுகளிக்க துபாயில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சுமார் ஒருவருடமாக உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் எண்ணிக்கைகள்,தரம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு 25 சிறந்த இடங்கள் பட்டியலிடப்பட்டன.
“25 சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத் தேர்வு செய்யப்பட்டிருபடன் முலம் நாங்கள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்”என்றார் துபை சுற்றுலா மற்றும் வணிகக் கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலர் இஸாம் காஸிம்.இந்த ஆண்டு துபாயில் மாபெரும் உணவுத்திருவிழா நடைபெற்றது.உலக அளவிலான இசை,கலாச்சாரம்,விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன என்று காஸிம் தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக